Dinesh Rachitha Issue : சின்னத்திரையில் முன்னணி நடிகராகவும், நடிகையாகவும் திகழ்ந்து வருபவர்கள் தான் தினேஷ் மற்றும் ரக்ஷிதா. இவர்களுடைய பிரிவு அனைவரும் அறிந்ததே, தற்பொழுது இந்த நிகழ்வு குறித்து தினேஷின் பெற்றோர் பேசியுள்ளனர்.
பெங்களூரில் பிறந்திருந்தாலும் தற்பொழுது தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்படும் சீரியல் நடிகை தான் ரக்ஷிதா. கன்னட மொழியில் வெளியான ஒரு நிகழ்ச்சியின் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டு கலைத்துறையில் களமிறங்கிய இவர், அதன் பிறகு தமிழ் மொழியிலும் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என்று பல முன்னணி சேனல்களில் வெளியான பிரபல நாடகங்களில் நடித்து புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு தினேஷ் கோபாலசாமி என்கின்ற தனது சக சீரியல் நடிகரை காதலித்து அவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த எட்டு ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி, சில மாதங்களுக்கு முன்பு தங்கள் பிரிவு குறித்து அறிவித்தனர். மேலும் இந்த இருவரும் இப்பொழுது தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ரசித்தவுடன் தான் மீண்டும் சேர இருப்பதாக பல இடங்களில் தினேஷ் கூறி வருகிறார்.
குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது அவர் இருந்து வரும் நிலையில், பல தருணங்களில் மீண்டும் இரட்சிதாவுடன் இணைய உள்ளது குறித்து பேசி உள்ளார். ஆனால் ரக்ஷிதாவோ, தொடர்ந்து அவருடன் வாழ முடியாது என்றும், அவருக்கு எதிராகவும் பல கருத்துக்களை தொடர்ச்சியாக தனது சமூக வலைதளங்களில் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் "பிரீஸ் டாஸ்க்கில்" தங்களது மகன் தினேஷை சந்தித்து விட்டு வெளியே வந்த தினேஷின் பெற்றோர் தற்பொழுது தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் பேசிய அவர்கள் "தினேஷ் மற்றும் ரட்சிதா காதலித்த காலத்திலேயே எனது மகன் பெற்றோரின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிய பொழுது, ரக்ஷிதா நேரில் எங்களை வந்து சந்தித்து பேசி, அந்த திருமணத்தை நடத்தினார்".
"8 ஆண்டுகள் இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு தான் வாழ்ந்து வந்தனர், ஆனால் கடந்த சில மாதங்களாக சிலரின் தேவையற்ற பேச்சுக்களை கேட்டு ரக்ஷிதா எங்கள் மகனை பிரிந்துள்ளார். நாங்களும் எவ்வளவோ அவரிடம் பேசி பார்த்தோம். இரு வீட்டை சேர்ந்த பெரியவர்களும் ஒன்றாக அமர்ந்து இருவரும் மீண்டும் சேர்ந்து வாழும்மாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் ஒரு வீட்டார் மட்டுமே இறங்கிப் போவது எந்த பயனையும் தராது".
"எங்களுடைய பேச்சுக்கு ரக்ஷிதா மதிப்பு கொடுத்ததாகவும் எங்களுக்கு தெரியவில்லை. அவர் தொடர்ந்து தினேஷை விட்டு பிரியவே ஆசைப்படுகிறார். இதில் இனி நாங்கள் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்கள் மகன் நல்லவன், அவன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் நாடகங்களில் நடிக்கிறான் என்றால் தொடர்ந்து நடிக்கட்டும். இல்லையென்றால் சொந்த ஊருக்கு திரும்பி அவன் வந்து விட்டால் எங்களுக்கு மிகவும் சந்தோஷம்."
"அவனுக்கு என்று நாங்கள் கொஞ்சம் நிலத்தையும், சொத்தையும் சேர்த்து வைத்திருக்கிறோம். அதை பாதுகாத்துக் கொண்டாலே போதும். விரைவில் இவர்கள் இருவருடைய வழக்கு நீதிமன்றத்தில் வரவிருக்கிறது. அப்பொழுது அவர்கள் விவாகரத்து கேட்டாலும் அதை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று மிகவும் மனம் நொந்து அவர்கள் பேசியுள்ளனர்.