பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடந்து வரும் நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் நிக்சன் தந்தை மகனை செம்ம டேமேஜ் செய்துள்ளார். அதே போல் விஷ்ணுவின் குடும்பத்தினர் பூர்ணிமா குறித்து வார்னிங் கொடுத்துள்ளனர். இதுகுறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, துவங்கப்பட்டு இன்றுடன் 80 நாட்களை எட்டியுள்ளது. மேலும் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்... பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஃபிரீஸ் டாஸ்க் நேற்று முதல் துவங்கியது.
நேற்றைய தினம், பூர்ணிமாவின் அம்மா, அர்ச்சனாவின் அம்மா - அப்பா, விக்ரமின் பெற்றோர், மற்றும் விஜய் வர்மாவின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து ரணகளம் செய்தனர். குறிப்பாக... உள்ளே வந்த அனைவருமே மிகவும் ஜாலியாக அனைவருடனும் எவ்வித பாடுபடும் காட்டாமல் பழகியது பார்ப்பதற்கே பாசிட்டிவ் உணர்வை கொடுத்தது. உள்ளே வந்தவர்கள் பெஸ்ட் போட்டியாளர் என்று விசித்ராவை தேர்வு செய்து அவருக்கு கோப்பை ஒன்றையும் வழங்கினர். அதே போல் உள்ளே வந்த நான்கு குடும்பத்தினருக்கும், நினைவு பரிசாக போட்டியாளர்கள் சிலர் தங்களிடம் இருந்த பொருட்களை பரிசாக கொடுத்தனர். இது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது.
இதை தொடர்ந்து இன்றைய தினம், நிக்சனின் தந்தை, விஷ்ணுவின் சகோதரி, தாயார் மற்றும் தினேஷின் பெற்றோர் உள்ளே வர உள்ளனர். நிக்சன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அவருக்கு அட்வைஸ் செய்வார் என பார்த்தால், மற்ற ஹவுஸ் மேட்சுடன் சேர்ந்து கொண்டு செம்மையாக கலாய்த்து தள்ளினார். மேலும் நிக்சன் பற்றி தெரியாத பல தகவல்களை கூறி உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதே போல் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் விஷ்ணுவின் சகோதரி... நீ பூர்ணிமா மற்றும் மாயா நடுவே போகாதே. நீ உன் விளையாட்டை தனியாக விளையாடு என தன்னுடைய தம்பிக்கு வார்னிங் கொடுப்பது போல் பேசியுள்ளார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.