
கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி, ரேவதி, சுவாதி என்று எல்லோரையும் வச்சு டிராமா பண்ணிய சந்திரகலா இப்போது நவீனை வைத்து குடும்பத்தை பிரிக்கும் நாடகத்தை நடத்தி வருகிறார். சாமுண்டீஸ்வரிக்கும், துர்காவிற்கும் இடையில் சண்டையை உண்டாக்கி அதன் மூலமாக அவர் குளிர் காய்ந்து வருகிறார். இதில், நவீனை கடத்திச் சென்று குழி தோண்டி மண்ணுக்குள் பாக்ஸில் வைத்து புதைத்துவிட்டார். இதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி தான் நவீனை கடத்தி கொன்றதாக ஊர் முழுவதும் பரப்ப ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில் நவீன் இறந்துவிட்டதாக கருதி துர்கா பூச்சி மருந்து குடித்துவிட்டு இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எப்படியாவது நவீனை அவரிடம் பேச வைக்கும் முயற்சியில் கார்த்தி இருந்தாலும், அது முடியாமலும் போய்விட்டது.
கீர்த்தி சுரேஷின் டாப் 5 படங்கள்; ஒரு நடிகையின் தவறான முடிவு வரமானது எப்படி?
நவீனுக்கு இருந்தது ஒரே ஒரு வழி தான். அதுவும் அந்த ரவுடியின் போன். அந்த நம்பரை கஸ்டமர் கேருக்கு போன் போட்டு அதனை பிளாக் செய்துள்ளார். இதனால், அந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நல்ல வேலையாக தான் எங்கிருக்கிறேன் என்பதற்கான அடையாளத்தை நவீன் முன் கூட்டியே கொடுத்ததால் என்னவோ, கார்த்திக் அதனை வைத்து நவீனை தேடி வருகிறார். கடைசியாக நவீன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார். இதற்கு எப்படியும் மண் தோண்டுவதற்கு கடப்பாரை, கம்பி என்று ஏதாவது பயன்படுத்தியிருப்பார்கள். இதை தொடர்ந்து இதற்கான வேலைகள் செய்பவரை சந்தித்து அவரிடம் விசாரிக்கின்றனர்.
அப்போதுதான் குமரேசன் என்பவரிடம் விசாரிக்க அவரும் தன்னிடம் ரூ.5000 கொடுத்து ஒரு கும்பல் மண்வெட்டி, கடப்பாரையை வாங்கி சென்றதாக ஒப்புக் கொண்டார். மேலும், அதில் ஒருவரது பெயர் குமார் என்றும் குமரேசன் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து இன்று ஒரே நாளில் அந்த குமாரை பிடித்து அடித்து உண்மையை வெளிக்கொண்டு வந்தார் கார்த்திக். அவரும் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நவீன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை காப்பாற்றி உடனே மருத்துவமனைக்கும் கூட்டிச் சென்றனர்.
Diwali Movies : டியூட் vs பைசன் vs டீசல் - கோலிவுட்டில் தீபாவளி வின்னர் யார்?
பிறகு துர்காவை சந்திக்க வைத்து அவரையும் காப்பாற்றினார். இதைத் தொடர்ந்து சாமூண்டீஸ்வரிக்கும் தன்னை கடத்தியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும், தன்னை கடத்தியது சிவனாண்டி தான் என்று நவீன் வாக்குமூலம் கொடுத்தார். நவீன் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து துர்கா கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சாமுண்டீஸ்வரி விடுவிக்கப்பட்டார். மேலும், சிவனாண்டியும் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது பற்றி இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.