யூடியூப்பில் யூடியூப் மியூசிக் மற்றும் யூடியூப் பிரீமியம் என்ற கட்டண சந்தாவில் சேர்ந்த பயனர்களின் எண்ணிக்கை சுமார் 80 கோடியைத் தாண்டியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் நம்பர் ஒன் வீடியோ தளமாக யூடியூப் இருந்து வருகிறது. அதிக அளவு பார்வையாளர்கள் இருப்பதால், நாளுக்கு நாள் விளம்பரங்களின் எண்ணிக்கையும், விளம்பரம் ஓடும் நிமிடங்களையும் யூடியூப் நிறுவனம் அதிகரித்து வருகிறது. மேலும், விளம்பரமில்லாமல் யூடியூப்பை கண்டுகளிக்க யூடியூப் பிரீமியம் திட்டத்தில் சேரும்படி ஆஃபர்களை வழங்குகிறது. இதனால் யூடியூப்பில் கட்டண சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாத பயனர்கள் புள்ளிவிவரங்களை கூகுள் அறிவித்தது. அதன்படி, யூடியூப் மியூசிக் மற்றும் பிரீமியம் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கையானது உலகளவில் 80 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 50 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்தனர். தற்போது அதன் எண்ணிக்கை 80 மில்லினைத் தாண்டியுள்ளது.
இது குறித்து யூடியூப் நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் லையர் கோஹன் கூறுகையில், இது யூடியூப் தளத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் "இசைத் துறையில் ரசிகர்களை முதன்மைப்படுத்தும் சந்தா சேவையை உருவாக்குவதன் மூலம் இந்த 80+ மில்லியன் மைல்கல்லை எட்டியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
PhonePe: இனி குழப்பம் இல்லை.. ஆதார் கார்டு நம்பர் வைத்தே இதை செய்யலாம்!
YouTube Premium ஆனது YouTube மற்றும் YouTube Music அனைத்தையும் உள்ளடக்கியது, விளம்பரமில்லா சேவைகள், ஆஃப்லைனில் வீடியோக்களைப் பார்க்கும் வசதி, பின்புலத்தில் யூடியூப் மியூசிக்கில் பாடல்களை ஒலிக்கச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் யூடியூப் பிரீமியமில் உள்ளன. குறைந்த கட்டணத்தில் பயனர்களுக்கு சலுகைகள் வழங்குவதால், பிரீமியம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
யூடியூப் பிரீமியம் சந்தாவானது வெறும் 10 ரூபாய்க்கு ஆஃபரில் கிடைக்கிறது. இதற்கு https://www.youtube.com/premium?app=desktop&cc=r3svf9tt8vxnpv என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் தகுதியுள்ள பயனராக இருந்தால், 10 ரூபாய்க்கு யூடியூப் பிரீமியத்தைப் பெறலாம். விளம்பரமில்லா வீடியோக்களை கண்டுகளிக்கலாம்.