
வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், வீடியோக்களை உருவாக்க யூடியூப் கிரியேட் என்ற புதிய வீடியோ எடிட்டிங் செயலியை அறிவித்துள்ளது. இதைப்பற்றி வியாழன் அன்று மேட் ஆன் யூடியூப் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.
“வீடியோக்களுக்கான தயாரிப்பு செயல்முறை கடினமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்" என்று கூறியுள்ள யூடியூப், "வீடியோக்களை உருவாக்குவதற்கு யூடியூப் கிரியேட் என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறோம்" என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், யுகே, இந்தோனேஷியா, கொரியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் ஆண்ட்ராய்டில் ப்ளே ஸ்டோரில் பீட்டா பயனர்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஐபோன் பயனர்களுக்கு இது 2024 இல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூடியூப் கிரியேட் என்பது குறும்படங்கள் மற்றும் நீண்ட வீடியோக்கள் இரண்டிற்கும் வீடியோ எடிட்டிங் செய்வதை எளிதாகக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது கட்டணமில்லாத இலவச செயலி ஆகும். ஆனால், படைப்பாளிகளின் இந்த வசதியை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
புதிய யூடியூப் கிரியேட் AI செயலியில் துல்லியமான எடிட்டிங், டிரிம்மிங், ஆட்டோமேட்டிக் தலைப்பு, குரல் மற்றும் மாற்றங்கள் போன்ற அம்சங்கள் இருக்கும். டிப்ட டிக்டாக் போல ராயல்டி-இல்லாத இசையைத் தேர்வுசெய்யவும் வயாப்பையும் கொடுக்கிறது.
புதிய செயலியை வடிவமைக்க சுமார் 3,000 படைப்பாளர்களின் கருத்துக்களைப் பயன்படுத்தியதாக யூடியூப் கூறுகிறது. காலப்போக்கில் புதிய புதிய அம்சங்களையும் இந்த யூடியூப் கிரியேட் செயலியில் இணைக்க இருப்பதாகவும் உறுதியளிக்கிறது.
ட்ரீம் ஸ்கிரீன் எனப்படும் புதிய அம்சத்தை பயன்படுத்தி வீடியோக்களின் பின்னணியை தேர்வு செய்ய முடியும். வீடியோ பற்றிய குறிப்பைச் சொன்னால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வீடியோ அல்லது படத்திற்கு ஏற்ற பின்னணியைச் சேர்க்க அனுமதிக்கும்.
அடுத்த ஆண்டு இன்னும் விரிவான வசதிகளுட்ன யூடியூப் கிரியேட் செயலி வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது. கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இதுபற்றி ட்விட்டரில் எழுதியுள்ள பதிவில், ஒரு இடுகையின் மூலம் புதிய ட்ரீம் ஸ்கிரீன் அம்சத்தைப் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார், அவர் எழுதினார், “வீடியோ தயாரிப்பை மிகவும் எளிதாக்குவதற்கு படைப்பாளிகள் யூடியூப் கிரியேட் செயலியை பயன்படுத்தலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.