YouTube ஷார்ட்ஸ் வீடியோவில் இனி ஹாலிவுட் எஃபெக்ட்ஸ்! யூடியூப் கொண்டு வரும் மிரட்டலான AI 'Add Object' வசதி!

Published : Mar 02, 2026, 06:36 PM IST
YouTube

சுருக்கம்

YouTube யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களை AI மூலம் மாற்றி அமைக்கும் புதிய 'Add Object' மற்றும் 'Reimagine' அம்சங்கள் குறித்து முழுமையாக அறியுங்கள். மிரட்டலான AI 'Add Object' வசதி!

யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) வீடியோக்களில் எடிட்டிங் செய்வது இனி மிகவும் எளிதாகப் போகிறது. 'Add Object' என்ற புதிய கருவி மூலம், நீங்கள் ஒரு வீடியோவில் இல்லாத பொருளை AI உதவியுடன் சேர்க்க முடியும். உதாரணமாக, ஒரு சாதாரண டான்ஸ் வீடியோவில் காற்றில் பறக்கும் ஷூக்கள் அல்லது ஒரு காமெடி வீடியோவில் ஸ்பீச் பபிள் (Speech Bubble) போன்றவற்றை வெறும் டெக்ஸ்ட் ப்ராம்ப்ட் (Text Prompt) மூலம் சேர்த்துக் கொள்ளலாம்.

8 நொடிகள் வரையிலான கிளிப்களில் இந்த மாற்றங்களைச் செய்ய முடியும். இதற்காக நீங்கள் எந்த ஒரு பிரத்யேக எடிட்டிங் மென்பொருளையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை; யூடியூப் ஆப் உள்ளேயே இதைச் செய்து முடிக்கலாம்.

ஒரே ஒரு புகைப்படத்தை வீடியோவாக மாற்றும் 'Reimagine'

இந்த அப்டேட்டில் மிக முக்கியமான அம்சம் 'Reimagine' ஆகும். இது ஒரு வீடியோவில் உள்ள ஒரு ஃபிரேமை (Single Frame) எடுத்து, அதை முற்றிலும் புதிய ஒரு வீடியோவாக மாற்றும் திறன் கொண்டது. உதாரணமாக, கடலில் அலைச்சறுக்கு செய்யும் ஒரு வீரரின் புகைப்படத்தை எடுத்தால், அதை நியான் ஸ்டைலிலோ அல்லது காமிக் புக் ஸ்டைலிலோ ஒரு புதிய வீடியோவாக AI உருவாக்கித் தரும்.

இதற்காக நீங்கள் இரண்டு ரெஃபரன்ஸ் (Reference Photos) புகைப்படங்களைக்கூட அப்லோட் செய்து, வீடியோவின் ஸ்டைலை மாற்றியமைக்கலாம். இது கிரியேட்டர்களின் கற்பனைத் திறனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

கிரியேட்டர்களின் உரிமைக்கு பாதுகாப்பு

மற்றவர்களின் வீடியோக்களை AI மூலம் மாற்றும்போது காப்புரிமைப் பிரச்சினை வருமா என்ற கேள்வி எழலாம். இதற்கு யூடியூப் தெளிவான பதில் அளித்துள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு 'Remix' வீடியோவும், அதன் அசல் வீடியோவிற்கான லிங்க்-ஐ (Link) கொண்டிருக்கும். இதன் மூலம் அசல் வீடியோவை உருவாக்கியவருக்கு உரிய அங்கீகாரம் (Credit) கிடைக்கும்.

மேலும், தனது வீடியோக்களை மற்றவர்கள் AI மூலம் ரீமிக்ஸ் செய்யக்கூடாது என்று நினைக்கும் கிரியேட்டர்கள், யூடியூப் ஸ்டுடியோவில் (YouTube Studio) இதற்கான செட்டிங்ஸை ஆஃப் (Opt-out) செய்துகொள்ளும் வசதியையும் யூடியூப் வழங்கியுள்ளது.

எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தற்போது இந்த வசதி முதற்கட்டமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆங்கில மொழி கிரியேட்டர்களுக்கு மட்டுமே சோதனையிடப்பட்டு வருகிறது. இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு, இந்திய கிரியேட்டர்கள் உட்பட உலகெங்கும் உள்ள அனைவருக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

போர் அல்லது பேரிடர் பதற்றம்: நெட்வொர்க் முற்றிலுமாக முடங்கினால் உயிரைக் காக்கும் 5 கேஜெட்டுகள்!
வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஷாக்! 6 மணி நேரத்திற்கு ஒருமுறை லாக் அவுட் ஆகும் - தப்பிப்பது எப்படி?