அனைவரும் விரும்பும் ஐபோன் 15 மாடல் இப்போது ரூ.25,000க்கு கிடைக்கிறது. அது எப்படி? என்பது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.
ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி
வாழ்க்கையில ஒரு முறையாவது ஐபோன் பயன்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக உள்ளது. ஆனால் அதன் விலை அதிகமாக இருப்பதால் பலர் இந்த ஆசையை மறந்து விடுகின்றனர். இந்நிலையில், ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அதாவது ஐபோன் 15 மாடலுக்கு ப்ளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் மாடலை கொண்டு வர தயாராகி வருகின்றன. இதனால் ஐபோன் 15 மாடலுக்கு போட்டி போட்டு தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. அதாவது ப்ளிப்கார்ட் விற்பனை தளத்தில் ஐபோன் 15 மாடலுக்கு 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ரூ.69,900 விலை கொண்ட இந்த போனை ₹60,999க்கு வாங்க முடியும். மேலும் பல்வேறூ வங்கிகளின் கிரெடிட் கார்டு மூலமாக இந்த போனை வாங்கினால் கூடுதலா ₹1,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதனால் போனின் விலை ரூ59,999 ஆக குறைகிறது.
எக்ஸ்சேஞ்ச்ஆஃபர்
இந்த ஆஃபர் இத்துடன் நிறைவடையவில்லை. உங்களது பழைய ஐபோனை எக்ஸ்சேஞ்ச் செய்து கூடுதலகா தள்ளுபடி பெறவும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பழையபோனின் கண்டிஷனைப் பொறுத்து, அதிகபட்சமாக ரூ.46,950 வரை தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருந்தால் எக்ஸ்சேஞ்ச் ஆபர் மூலம் ரூ.25,000 என்ற விலைக்கு ஐபோன் 15 மாடலை வாங்கிக் கொள்ள முடியும்.
என்னென்ன சிறப்பம்சங்கள்?
ஐபோன் 15 மாடலின் சிறப்பு அம்சங்களை பார்த்தால் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்DR டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. A16 பயோனிக் சிப், 6 கோர் பிராசஸர்ல கொண்டு இயங்குகிறது. கேமராவைப் பொறுத்தவரை, இந்த போனில் 48 மெகாபிக்சல்ஸ், 12 மெகாபிக்சல்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி, வீடியோ கால்ஸ் எடுக்க 12 மெகாபிக்சல்ஸ் கொண்ட செல்பி கேமரா உள்ளது. 556 x 1179 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. OLED டெக்னாலஜி கொண்ட டிஸ்பிளே அமைந்துள்ளது.
iOS 17 ஆப்பரேட்டிங் இயங்கு தளம் கொண்ட இந்த போனில் கேமரா மூலம் 4K ரெசல்யூஷன்ல வீடியோக்களை ரெக்கார்ட் பண்ணலாம். இந்த போனுக்கு ஆப்பிள் நிறுவனம் ஓரான்டு வாரண்டி கொடுக்கிறது.