ப்ளிப்கார்ட்டில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக காணலாம்.
புத்தாண்டு தொடங்கி விட்டதாலும், பொங்கல் பண்டிகை காலம் என்பதாலும் பலரும் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர். இதில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு என்று ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த பண்டிகை காலத்தில் சாம்சங் போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு ப்ளிப்கார்ட்டில் (Flipkart) சாம்சங் போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (SAMSUNG Galaxy A14 5G)
சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனுக்கு ப்ளிப்கார்ட் (Flipkart) விற்பனை தளத்தில் 42% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ரூ.20,999 என்ற விலை கொண்ட இந்த போனை இப்போது ரூ.11,999 என்ற விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும். ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதலாக 5% தள்ளுபடி பெற முடியும்.
இந்த போனில் 6.6 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் 50 எம்பி மெயின் கேமரா, 13 எம்பி செல்பி கேமரா, 5000mah பேட்டரி உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (SAMSUNG Galaxy M35 5G)
சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை ரூ.24,499 ஆகும். இந்த போனுக்கு ப்ளிப்கார்ட்டில் 37% தள்ளுபடி அளிக்கப்படுவதால் ரூ.15,249க்கு வாங்கிக் கொள்ள முடியும். மேலும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதலாக 5% தள்ளுபடி பெறலாம். இந்த போனில் 6.6 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 50எம்பி ரியர் கேமரா அம்சம் உள்ளது. இது தவிர 6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 6000mah பேட்டரி ஆகிய வசதிகள் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஃப்15 5ஜி (SAMSUNG Galaxy F15 5G)
சாம்சங் கேலக்ஸி எஃப்15 5ஜி போனுக்கு ப்ளிப்கார்ட்டில் 14% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஆகையால் ரூ.16,999 என்ற விலை கொண்ட இந்த போனை இப்போது ரூ.14,499க்கு வாங்கிக் கொள்ளலாம். மேலும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கூடுதலாக 5% தள்ளுபடியும், ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ரூ.1000 உடனடி கேஷ் பேக் சலுகையும் கிடைக்கும். இந்த போனில் 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 50 எம்பி மெயின் கேமரா, 13 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (SAMSUNG Galaxy S23 5G)
சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ப்ளிப்கார்ட்டில் அதிரடியாக 52% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.89,999 என்ற விலை கொண்ட இந்த போனை ரூ.42,999க்கு வாங்கிக் கொள்ள முடியும். ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கூடுதலாக 5% தள்ளுபடி பெறலாம். இந்த போனில் 6.1 இன்ச் முழுமையான ஹெச்டி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.