இந்தியாவில் ரூ.10,000க்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் குறித்தும் அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
புத்தாண்டு தொடங்கி விட்டதாலும், பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதாலும் பெரும்பாலானோர் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் முதல் ரூ.10,000க்குள் கிடைக்கும் 5 பெஸ்ட் போன்கள் குறித்து பார்க்கலாம்.
இன்ஃபினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G)
இன்ஃபினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 பொருத்தப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். இந்த போனில் 48எம்பி டூயல் ரியர் மெயின் கேமரா, 8எம்பி செல்பி கேமரா அம்சங்கள் உள்ளன. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. 5,000எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.9,849 ஆகும்.
சாம்சங் கேலக்ஸி எம் ஓ 4 (Samsung Galaxy M04)
சாம்சங் கேலக்ஸி எம் ஓ 4 5ஜி போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி, தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவும் 13MP பிரதான சென்சார் கேமரா அம்சங்கள் உள்ளன. MediaTek Helio P35 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.7,999ல் இருந்து தொடங்குகிறது.
சியோமி ரெட்மி ஏ4 (Xiaomi Redmi A4)
சியோமி ரெட்மி ஏ4 5ஜி மாடலில் 6.88 இன்ஸ் அள்வு கொண்ட ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிசி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது.50 எம்பி ரியர் கேமரா, 50 எம்பி பிரன்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5160 mAh பேட்டரி பெற்றுள்ளது. 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. இந்த போனின் விலை ரூ.8,498 ஆகும்.
போகோ சி75 (POCO C75)
போகோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி ரியர் கேமரா, 50 எம்பி பிரன்ட் கேமரா அம்சத்தை பெற்றுள்ளது. Android v14இயங்கு தளத்தை கொண்டு செயல்படும் இந்த போனில் 6.88 இன்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 5160 mAh பேட்டரி 4ஜிபி ரேம் வசதிகள் உள்ளன. மிகவும் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 4s Gen 2 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். இந்த போனின் விலை ரூ.8,499 மட்டுமே.
ரியல்மி சி53 (realme C53)
ரியல்மி சி53 ஸ்மார்ட்போனில் 108 எம்பி மெயின் கேமராவும், 8 எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 6.74 இன்ச் டிஸ்பிளேயுடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 mAh பேட்டரியை பெற்றுள்ளது. 6ஜிபி ரேம் இட வசதி கொண்ட இந்த போனில் எப் எம் ரேடியோ, ஆடியோ ஜாக், பிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற எச்சக்கச்ச அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த போனின் விலை ரூ.8,999 ஆகும்.