50 MP கேமரா; கண்ணைக் கவரும் டிசைன்; ரூ.10000 தான்; எந்த மாடல் தெரியுமா?

By Rayar r  |  First Published Jan 3, 2025, 2:22 PM IST

மோட்டோரோலா நிறுவனம் Moto G05 என்ற ஸ்மார்ட்போனை ஜனவரி 7ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம். 


புத்தாண்டு தொடங்கி விட்டதாலும், பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதாலும் பல்வேறு நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் மோட்டோரோலா நிறுவனம் Moto G05 என்ற ஸ்மார்ட்போனை ஜனவரி 7ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் சிறப்பங்கள் என்னென்ன? விலை என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Moto G05 ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் HD+ (720x1,612 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. LCD டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் திரையில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சமும் உள்ளது. சக்திவாய்ந்த Mediatek Helio G81 Extreme சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். மேலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதனால் இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் தடையின்றி பயன்படுத்த முடியும். Moto G05 கேமரவை பொறுத்தவரை 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் Dolby Atmos ஆதரவு மற்றும் Hi-Res ஆடியோ சான்றிதழுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

Moto G05 போன் பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில் லெதர் பேனலுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மோட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Moto E15 உடன் இணைந்து Moto G05 போனை ஏற்கெனவே சில நாடுகளில் அறிமுகம் செய்தது. தற்போது Moto G05 ஸ்மார்ட்போன் Moto G04 க்கு அடுத்தபடியாக இந்தியாவில் அறிமுகமாகும் போனாக உள்ளது.

ஜனவரி 7 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு Moto G05 போன் இந்தியாவில் அறிமுமாக உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. Moto G05 போன் விலை ரூ.10,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு தொடக்கத்தில் பட்ஜெட் விலையில் புதிய போன் வாங்க நினைப்பவர்களுக்கு  Moto G05 நல்ல தேர்வாக அமையும். 

click me!