அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரூ.35000க்குள் ஐபோன் வாங்க முடியும். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அமேசான் குடியரசு தின விற்பனை
குடியரசு தினம் நெருங்கி வருவதால், ஆன்லைன் விற்பனையில் முன்னணியில் உள்ள ப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளன. ப்ளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அமேசானின் குடியரசு தின சிறப்பு விற்பனையும் ஜனவரி 13ம் தேதி தொடங்குகிறது.
அதே வேளையில் அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு சிறப்பு விற்பனை ஒருநாள் முன்னதாகவே தொடங்கும். இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன்கள் உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 15 மாடலுக்கு அதிரடி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த போன் அமேசானில் ரூ.69,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.35,000க்குள் வாங்கலாம்
குடியரசு தின சிறப்பு விற்பனையில் இந்த போனுக்கு 18% தள்ளுபடி வழங்கப்படுவதால் ரூ.57,499க்கு பெறலாம். மேலும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் உடனடியாக ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் நல்ல நிலையில் உள்ள பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.22,800 வரை சேமிக்க முடியும். இவை எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் ஐபோன் 15 போனை ரூ.35,000க்குள் வாங்கிக் கொள்ளலாம்.
என்னென்ன சிறப்பம்சங்கள்?
இது மட்டுமின்றி, உங்களிடம் மொத்த பணம் கையில் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை. மாதத்திற்கு ரூ.2,788 இஎம்ஐ முறையிலும் பணம் செலுத்தி ஐபோன் 15 மாடலை வாங்கிக் கொள்ள முடியும். இந்த போனின் அம்சங்களை பொறுத்தவரை உயர்தரமிக்க A16 பயோனிக் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளதால் மிகச்சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் 6GB வரை ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 48 எம்பி மற்றும் 12 எம்பி மெயின் கேமராக்களும், வீடியோ காலிங் மற்றும் செல்ஃபிக்களுக்கு 12 எம்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு தள்ளுபடி
ஆப்பிள் ஐபோன்கள் அவற்றின் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த தரத்திற்கு நன்கு அறியப்பட்டவை. ஸ்மார்ட்போன் துறையில், தரவுகள் மற்றும் தனியுரிமையை பாதுகாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஐபோன்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அமேசான் குடியரசு தின விற்பனையில் ஐபோன் 15 மட்டுமின்றி ஐபோன்களின் அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தகக்து.