அடிமட்ட விலைக்கு கிடைக்கும் 'ஒன்பிளஸ் 13'; இப்படி ஒரு மெகா தள்ளுபடியை எதிர்பார்க்கல!

By Rayar r  |  First Published Jan 13, 2025, 3:09 PM IST

ஒன்பிளஸ் 13 மாடல் ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போனில் மூன்று கேமராக்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன. 


ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் 

புத்தாண்டு தொடங்கி விட்டதாலும், பண்டிகை காலம் என்பதாலும் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு செல்போன்களை களமிறக்கி வ்ருகின்றன. அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 13 (OnePlus 13ஸ்மார்ட்போனை கடந்த 7ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த மாடலின் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.69,999 ஆகும்.

Tap to resize

Latest Videos

இந்த மாடலின் 16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.76,999க்கும், 24ஜிபி ரேம் மற்றும் 1TBஸ்டோரேஜ் விலை ரூ.89,999க்கும் விற்பனைக்கு அறிமுகமானது. இந்நிலையில்,  ஒன்பிளஸ் 13 போனுக்கு இப்போது அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுகிறது. அதாவது ரூ.69,999 விலை கொண்ட இந்த போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் மாடலை இப்போது ரூ.40,000க்குள் வாங்கிக் கொள்ள முடியும். 

ரூ.39,999க்கு வாங்கலாம் 

ICICI வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.5,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். கூடுதலாக, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் பழைய ஸ்மார்ட்போன் எந்தளவு நல்ல நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்து ரூ.18,000 வரை தள்ளுபடி பெறலாம். 

மேலும், எக்ஸ்சேஞ்சிற்கு ரூ.7,000 கூடுதல் போனஸும் கிடைக்கும். இந்த சலுகைகள் அனைத்தையும் சேர்த்தால்  ஒன்பிளஸ் 13 மாடல் ஸ்மார்ட்போனை ரூ.39,999க்கு வாங்கிக் கொள்ள முடியும்.

என்னென்ன சிறப்பம்சங்கள்?

ஒன்பிளஸ் 13 மாடல் போனில் ஏராளமான அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த மாடலில் 6.82 இன்ச் 2K+ AMOLED டிஸ்பிளே பொருத்தப்பபட்டுள்ளது. இந்த டிஸ்பிளேயின் பிரைட்னஸ் 4,500 நிட்கள் வரை இருக்கும். ஒன்பிளஸ் முதன்முறையாக இந்த மாடலில் தான் OE X2 டிஸ்பிளேவை கொண்டு வந்துள்ளது.

இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 இயங்குதளத்தை கொண்டு வந்துள்ளது. சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். 100W SuperVOOCமற்றும் 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி சார்ஜ் போட வேண்டிய அவசியம் இருக்காது.

நீர், தூசியில் இருந்து பாதுகாப்பு 

ஒன்பிளஸ் 13 மாடலில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50MP சோனி பிரதான கேமரா, 50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் லென்ஸ் கேமரா வழங்கப்பட்டுள்ளன. செல்ஃபிகள் எடுக்க மற்றும் வீடியோ காலிங் செய்ய 32MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போன் நீர் மற்றும் தூசியை தாக்குப்பிடிக்கும் IP68 மற்றும் IP69 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 13 போன் அப்சிடியன், நீலம் மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

click me!