இனி லேப்டாப் ஆர்டர் செய்தால் 10 நிமிடங்களில் டெலிவரி; பிளிங்கிட் சூப்பர் அறிவிப்பு!

By Rayar r  |  First Published Jan 10, 2025, 6:17 PM IST

லேப்டாப் ஆர்டர் செய்தால் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை பிளிங்கிட் அறிமுகம் செய்துள்ளது. இந்த செய்தி விரிவாக பார்க்கலாம்.  


விரைவு டெலிவரி சேவை

துணிமணிகள் முதல் மொபைல்கள், மடிக்கணினிகள் மின்சாதனங்கள் வரை என அனைத்து பொருட்களையும் வாங்க நாம் கடைகளுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. இந்த பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இவற்றை வீடுகளுக்கே கொண்டு வந்து விடுகின்றன. இப்போது ஆன்லைன் வாயிலாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல்கி பெருகி விட்டதால் வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பிடிக்க ஒவ்வொரு நிறுவனமும் விரைவு சேவையை கையிலெடுத்துள்ளன.

Tap to resize

Latest Videos

அதாவது நாம் ஏதாவது பொருள் அல்லது மொபைல் போன்ற மின்சாதன பொருட்களை ஆர்டர் செய்தால் அவற்றை உடனே டெலிவரி செய்து வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் எடுக்கின்றன. அந்த வகையில் சொமோட்டாவின் விரைவு வர்த்தக தளமான பிளிங்கிட் லேப்டாப்களை 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை கொண்டு வந்துள்ளது.

10 நிமிடங்களில் லேப்டாப் டெலிவரி 

இது தொடர்பாக பிளிங்கிட் சிஇஓ அல்பிந்தர் திண்ட்சா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ''வாடிக்கையாளர்கள் இப்போது மடிக்கணினிகள், மானிட்டர்கள், அச்சுப்பொறிகள் மற்றும் பிற மின்னணு பொருட்களை தளம் மூலம் ஆர்டர் செய்யலாம். அவை அனைத்தும் வெறும் 10 நிமிடங்களில் வீட்டு வாசலுக்கு டெலிவரி செய்யப்படும். எங்களுடைய எலக்ட்ரானிக்ஸ் டெலிவரி வரம்பை விரிவுபடுத்தி வருகிறோம். இதற்காக முன்னணி பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளோம்'' என்றார்.

முன்னணி பிராண்டுகள் 

பிளிங்கிட் தளத்தில் HP, enovo, Zebronics, Canon என முன்னணி பிராண்டுகளின் லேப்டாப்கள், மானிட்டர்கள் மற்றும் பிரிண்டர்கள் கிடைக்கும் என அல்பிந்தர் திண்ட்சா கூறியுள்ளார். பிளிங்கிட் நிறுவனம் இப்போது டெல்லி,  புனே, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் அதன் மின்னணு விநியோக சேவையை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுப்படுத்தப்பட உள்ளது.

அதிரடி மாற்றங்கள் 

பிளிங்கிட் நிறுவனம் சமீபத்திய மாதங்களில் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த நிறுவனம் ஐபோன் 16, சாம்சங் கேலக்ஸி S24, பிளேஸ்டேஷன் 5 உள்ளிட்ட பொருட்களை 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் பணியை அறிமுகம் செய்தது. நகரங்கள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு கிராமப்பகுதிகளிலும் தங்களுடைய டெலிவரி சேவையை விரிவுப்படுத்தியது. தற்போது ப்ளிப்கார்ட், அமேசன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் மின்னணு பொருட்களை டெலிவரி செய்யும் பணிகளை கையில் எடுத்துள்ளது.

click me!