ஜியோவின் சூப்பர் பட்ஜெட் பிளான்! 11 மாத வேலிடிட்டியுடன் 1234 ரீசார்ஜ்!

By SG Balan  |  First Published Jan 6, 2025, 4:56 PM IST

ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட இந்த பிளான் ரூ.1234 க்குக் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில், நீங்கள் தினமும் 500MB டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 SMS பெறலாம்.


ஜியோ சமீபத்தில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட இந்த பிளான் ரூ.1234 க்குக் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில், நீங்கள் தினமும் 500MB டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் 100 SMS பெறலாம். ஆனால், இந்த திட்டம் ஜியோ பாரத் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மிகக் குறைந்த விலையில் வருகிறது. இந்தத் திட்டம் குறைவான டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கானது. ஜியோவின் இந்த திட்டம் ரூ.1234க்குக் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள். அதாவது சுமார் 11 மாதங்கள். இந்தத் திட்டம் ஜியோ பாரத் போன் பயனர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமான ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்தத் திட்டத்தைப் பெற முடியாது.

Tap to resize

Latest Videos

ஜியோவின் ரூ.1234 திட்டத்தின் பலன்கள்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1234 திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது. மேலும், தினமும் 500எம்பி அதிவேக டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த வகையில், இந்தத் திட்டத்தில் மொத்தம் 168 GB டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டம் நாடு முழுவதும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களும் உண்டு. மேலும், பயனர்கள் இலவச சர்வதேச ரோமிங் வசதியும் உண்டு. இந்தத் திட்டம் ஜியோ சாவன் மற்றும் ஜியோ சினிமா செயலிகளையும் கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம்.

ஜியோவின் ரூ.3999 திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால் வசதி உள்ளது. மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இணையத்தைப் பயன்படுத்த தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த வகையில், இந்த திட்டத்தில் மொத்தம் 912.5 ஜிபி டேட்டா வரும். 365 நாட்கள் வேலிடிட்டியுடன் OTT சந்தாவும் இலவசமாகக் கிடைக்கும்.

இத்திட்டத்தில் உள்ள இலவச OTT சந்தா தவிர மற்ற அனைத்து பலன்களையும் வழங்கும் திட்டமும் ஜியோவில் உள்ளது. அதன் விலை ரூ.3599.

எந்த திட்டம் சிறந்தது?

நீங்கள் கீபேட் போன் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் இன்டர்நெட் பயன்படுத்துவதும் குறைவாக இருந்தால், ரூ.1234 திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவராக இருந்தால், ரூ.3999 அல்லது ரூ.3599 க்கு ரீசாரஜ் செய்வது பொருத்தமாக இருக்கும்.

click me!