த்ரில்லான ரேசிங் அனுபவம் - டிராக் டே நிகழ்வில் வாடிக்கையாளர்களை அசத்திய யமஹா!

By Kevin Kaarki  |  First Published Mar 14, 2022, 9:34 AM IST

யமஹா நிறுவனம் 'டிராக் டே' எனும் நிகழ்வில் தனது வாடிக்கையாளர்களுக்கு பைக் ரேசிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 


இந்தியா யமஹா மோட்டார் பிரைவட் லிமிடெட் சார்பில் டிராக் டே நிகழ்வு நடைபெற்றது. யமஹா வாடிக்கையாளர்களுக்காக சென்னையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. ரேஸ் டிராக்கில் ரைடிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு யமஹா ஏற்பாடு செய்து இருந்தது. 

டிராக் ரைடிங் செய்யும் முன், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை ரேசிங் வல்லுநர்கள் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தனர். கலந்துரையாடல் போன்று நடைபெற்ற இந்த செஷனில் முன்னாள் ரேசிங் வீரர்கள், ரேசிங் பற்றிய நுனுக்கங்கள் மற்றும் களத்தில் பின்பற்ற வேண்டிய அடிப்படை நடத்தைகள் குறித்து வளக்கம் அளித்தனர்.

Latest Videos

undefined

நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட யமஹா வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் யமஹா YZF-R3, YZF-R15, MT-15, FZ சீரிஸ் மற்றும் ஏரோக்ஸ் மாடல்களை பயன்படுத்தும் 200-க்கும் அதிக வாடிக்கையாளர்கள் டிராக் ரைடில் கலந்து கொண்டு தங்களின் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை ரேசிங் கொண்டு ரேசிங் அனுபவத்தை பெற்றனர்.

யமஹா நிறுவனத்தின் "The Call of the Blue" பிராண்டிங்கின் கீழ் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. சர்வதேச தரத்தில் ரேசிங் பாரம்பரியம் மிக்க பிராண்டு என்ற அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பெருமை கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. 

இதுதவிர யமஹா நிறுவனம் "The Call of the Blue" பிராண்டிங்கில் பிரீமியம் பிரிவில் மேலும் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்துடன் இந்தியா முழுக்க இதே போன்ற டிராக் டே நிகழ்வுகளை நடத்தவும் யமஹா திட்டமிட்டு இருக்கிறது.

click me!