எக்ஸ்போசாட் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள்! இஸ்ரோவின் அடுத்த சாதனை!

By SG BalanFirst Published Jan 11, 2024, 4:26 PM IST
Highlights

இது சூரிய குடும்பத்திற்கு வெளியே இஸ்ரோவின் செயற்கைக்கோள் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள் ஆகும். பதிவு செய்யப்பட்டுள்ள விண்மீன் வெடிப்பு சுமார் 11 ஒளியாண்டுகள் தொலைவில் நிகழ்ந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் எக்ஸ்போ சாட்டிலைட் முதல் முறையாக விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறது.

இஸ்ரோவின் எக்ஸ்போ சாட் செயற்கைகோள் ஜனவரி 1ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கி.மீ. உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

Latest Videos

விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலா போன்றவை குறித்து ஆராய  இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவால் அனுப்பப்பட்டது.

வண்ணமயமாக மாறும் வாட்ஸ்ஆப்! 5 கலர் ஆப்ஷனுடன் புதிய அட்பேட் ரெடி!

The XSPECT payload on , has captured its first light from the Cassiopeia A (Cas A) supernova remnant.

During its performance verification phase, XSPECT was directed towards Cassiopeia A, a standard celestial source used for instrument evaluation. The observation commenced… pic.twitter.com/OCzuH2DvYy

— ISRO InSight (@ISROSight)

இதைத்தவிர, காலநிலை பற்றிய ஆய்வுகளுக்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த 'வெசாட்' என்ற செயற்கைக்கோள் மற்றும்  வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் அதே ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்நிலையில் விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை எக்ஸ்போ சாட் முதன்முறையாகச் சேகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் நோவா உமிழ்வு என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டம் வெடிக்கும் நிகழ்வு குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரோ கூறியுள்ளது.

காசியோப்பியா எ ("Cassiopeia A") என்ற விண்மீன் கூட்டத்தை எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது. இது சூரிய குடும்பத்திற்கு வெளியே இஸ்ரோவின் செயற்கைக்கோள் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள் ஆகும். பதிவு செய்யப்பட்டுள்ள விண்மீன் வெடிப்பு சுமார் 11 ஒளியாண்டுகள் தொலைவில் நிகழ்ந்துள்ளது.

அடல் சேது: இந்தியாவின் நீண்ட கடல் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

click me!