பார்வை குறைபாடு உள்ளவர்கள், குறிப்பிட்ட வண்ணங்களை விரும்புபவர்களுக்கு இந்த புதிய தீம் அப்டேட் உதவும் என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்களுக்குப் பிடித்த தீம் எதுவோ அதைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச கூகுள் டிரைவ் சேமிப்பு வசதியை முடிவுக்கு கொண்டு வர வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய வண்ணமயமான தீம்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. பச்சை, நீலம், வெண்மை, இளஞ்சிவப்பு, ஊதா என 5 வண்ணங்ககளில் தீம்கள் இடம்பெற்ற உள்ளன. இந்தப் புதிய தீம்களை விரைவில் வாட்ஸ்அப்பில் பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் இவற்றில் ஏதாவுத ஒரு தீமை தேர்வு செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் வாட்ஸ்அப் உரையாடல்களின் பின்னணி வண்ணமயமாக மாறிவிடும். இந்த அப்டேட் யாருக்கு பயன்படும் என்றும் வாட்ஸ்அப் தரப்பில் சொல்லப்படுகிறது.
பத்து திருக்குறள் சொன்னா பிரியாணி இலவசம்! செம்ம ட்ரீட் கொடுக்கும் ஹோட்டல்!
பார்வை குறைபாடு உள்ளவர்கள், குறிப்பிட்ட வண்ணங்களை விரும்புபவர்களுக்கு இந்த புதிய தீம் அப்டேட் உதவும் என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்களுக்குப் பிடித்த தீம் எதுவோ அதைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
இந்த அப்டேட்டுடன் நீண்ட காலமாக இருக்கும் வசதி ஒன்றும் நீக்கப்படுகிறது. ஆண்டிராய்டு பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட தங்கள் வாட்ஸ்அப் டேட்டாவை இலவசமாக கூகுள் டிரைவ் மெமரியில் சேமித்து வைக்கும் அம்சம் உள்ளது. இந்த வசதியை நீக்க வாட்ஸ்அப் முடிவு செய்திருக்கிறது.
கூகுள் டிரைவ் சேவையில் சேமிக்கப்படும் வாட்ஸ்அப் தரவுகள், 15GB வரம்புக்குள் கொண்டுவரப்படலாம். அல்லது கூகுள் ஒன் சந்தாதாரரானால் கூகுள் ட்ரைவ் மெமரியில் வாட்ஸ்அப் டேட்டாவை சேமிக்கும் வாய்ப்பை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவாலயத்தில் சவுண்டு விட்ட அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு