சியோமி நிறுவனம் தனது வாட்ச் S1 ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை சர்வதேச சந்தையில் நாளை அறிமுகம் செய்கிறது.
சியோமி நிறுவனம் தனது சியோமி வாட்ச் S1 மற்றும் S1 ஆக்டிவ் மாடல்களை நாளை (மார்ச் 15) சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இதே நிகழ்வில் சியோமி தனது சியோமி 12 சீரிஸ் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரில் வாட்ச் S1 ஆக்டிவ் மாடல் பிளாக், வைட், கிரீன், ரெட் மற்றும் புளூ ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
முன்னதாக சியோமி வாட்ச் S1 ஆக்டிவ் மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் குளோபல் வேரியண்டிலும் இதே அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்க்ப்படுகிறது. அதன்படி சியோமி வாட்ச் S1 ஆக்டிவ் மாட லில் 1.3 இன்ச் வட்ட வடிவிலான AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை இதய துடிப்பு சென்சார்,SpO2, ஸ்லீப், ஸ்டிரெஸ், எனர்ஜி லெவல் உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் வசதி, 117 வொர்க்-அவுட் மோட்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. பேட்டரியை பொருத்தவரை 470mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழமையாக சார்ஜ் செய்தால் 12 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. இதனை இரண்டு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.
கனெக்டிவிட்டிக்கு இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 5.2, வைபை போன்ற அம்சங்கள கொண்டிருக்கிறது. இத்துடன் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 22mm TPU/ரப்பர் ஸ்டிராப் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
சியோமி வாட்ச் S1 மற்றும் வாட்ச் S1 ஆக்டிவ் என இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் தவிர சியோமி 12 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களையும் சியோமி நாளை நடைபெறும் நிகழ்வில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது.