ஐபோன் 14 போலவே Dynamic Island அம்சத்துடன் வரும் Xiaomi MIUI

By Raghupati R  |  First Published Sep 14, 2022, 5:47 PM IST

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.


ஐபோன் 14 ஸ்மார்ட்போனில் எக்கச்சக்க தொழில்நுட்ப அம்சங்கள் வரும் என்று உலகளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபோன் 13 இலிருந்து வெறும் ஒரு சில மாற்றங்களை மட்டுமே செய்து, ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்டது.  அவ்வாறு ஐபோன் 14 இல் கொண்டு வரப்பட்ட அம்சங்களில் முக்கியமாக பேசப்படுவது அதன் மேற்புறத்திலுள்ள Dynamic Island எனப்படும் குட்டி தீவு தான்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..APPLE WATCH: 89 ஆயிரத்திற்கு வாட்ச் அறிமுகம் செய்த ஆப்பிள்!!

பொதுவாக ஐபோனில் கொண்டு வரப்படும் முக்கிய அம்சங்கள் எல்லாம், இதர ஆண்ட்ராய்டு உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களிலும் உட்புகுத்தப்படுவது வழக்கம்.  அந்த வகையில், தற்போது டெவலப்பர் ஒருவர் ஷாவ்மி ஸ்மார்ட்போனில் டைனாமிக் ஐலேண்ட் தீமை வைத்தால் எப்படி இருக்கும் என்று பார்த்துள்ளார். அது அட்டகாசமாக இருக்கவே, ஷாவ்மி நிறுவனமும் ஐபோன் 14ஐ போல, தனது ஸ்மார்ட்போனில் டைனமிக் தீவை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 

இதன் மூலம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைனமிக் ஐலாந்தை கொண்டு வரும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஷாவ்மி நிறுவனம் பெற உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சீன தீம் ஸ்டோர்களில் Grumpy Theme என்ற தீம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட டைனமிக் ஐலேண்ட் போன்ற இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..WhatsApp-ல் இனி ஸ்கோரல் செய்து மெசேஜ்களைப் பார்க்கத் தேவையில்லை.. வரப் போகிறது புதிய அப்டேட்!

இருப்பினும் இந்த கிரம்பி தீம் குறித்த அதிகாரப்பூர்வமான நம்பகத்தன்மை இல்லை. எனவே, பயனர்கள் இதை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகாரப்பூர்வமாக டைனாமிக் ஐலேண்ட் தீம்மை கொண்டு வரும் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் எது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

மேலும் செய்திகளுக்கு..Realme C33: 9 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியான ரியல்மி ஸ்மார்ட் போன்..!

click me!