ஸ்மார்ட்போனுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி... உடனே வாங்க சரியான நேரம்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 08, 2022, 05:31 PM IST
ஸ்மார்ட்போனுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி... உடனே வாங்க சரியான நேரம்..!

சுருக்கம்

இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 62 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 120 வாட் சார்ஜிங், மூன்று பிரைமரி கேமரா செட்டப் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 62 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 52 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அமேசான் தளத்தில் நடைபெற்று வபரும் மான்சூன் கார்னிவல் சேல் சிறப்பு விற்பனையில் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ. 4 ஆயிரம் அமேசான் கூப்பன் தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 6 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

தற்போதைய சிறப்பு விற்பனையில் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 256GB மெமரி மாடல் தற்போது ரூ. 52 ஆயிரத்து 999 விலையிலும், 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 56 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் - நாய்ர் பிளாக், ஒப்பேரா மௌவ் மற்றும் காண்டோர் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 

சியோமி 12 ப்ரோ அம்சங்கள்:

- 6.73 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்  
- 8GB ரேம், 256GB மெமரி 
- 12GB ரேம், 256GB மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 50MP வைடு ஆங்கில் கேமரா
- 50MP டெலிபோட்டோ கேமரா
- 32MP செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 
- 4600mAh பேட்டரி
- 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5ஜி, 4ஜி, வைபை 6E, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!