மிவி F40 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பேட்டரி பேக் அப் கொண்டு உள்ளது.
இந்திய சந்தையில் முன்னணி அக்சஸரீக்கள் பிராண்டு மிவி புதிய டுயோபாட்ஸ் F60 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், மிவி நிறுவனம் தற்போது டுயோபாட்ஸ் F40 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
முந்தைய மிவி F60 மாடலில் இருந்ததைப் போல் புதிய F40 மாடலிலும் 13mm டிரைவர்கள், ப்ளுடூத் 5.1 கனெக்டிவிட்டி, வாய்ஸ் கேன்சலேசன், அலெக்சா, சிரி மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட் கொண்டு இருக்கிறது. இது தவிர மிவி F40 டுயோபாட்ஸ் இயர்பட்ஸ்-ஐ தொட்டாலே மொபைல் அழைப்புகளை ஏற்கவும், தவிர்க்கவும் வசதி உள்ளது.
மிவி F40 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பேட்டரி பேக் அப் கொண்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் 70 சதவீத வால்யூமில் பயன்படுத்தி வந்தால் மட்டுமே 50 மணி நேரம் இடைவிடாது கேட்க முடியும். 500mAh பேட்டரி உடன் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. பேட்டரி கேசில் உள்ள LED டிஸ்ப்ளே பேட்டரியில் சார்ஜ் எவ்வளவு இருக்கிறது என்ற விவரங்களை கண்காணிக்கும் வசதி கொண்டுள்ளது.
மிவி டுயோபாட்ஸ் F40 அம்சங்கள்:
- 13mm டிரைவர்கள்
- ப்ளுடூத் 5.1 கனெக்டிவிட்டி
- வாய்ஸ் கேன்சலேசன் வசதி
- அலெக்சா, சிரி மற்றும் கூகுள் அசிஸ்டன்ட்
- டச் கண்ட்ரோல் வசதி
- 50 மணி நேரத்திற்கு பேட்டரி பேக் அப்
- 500mAh பேட்டரி
- சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- பேட்டரி கேசில் உள்ள LED டிஸ்ப்ளே
நிறங்கள் மற்றும் விலை விவரங்கள்:
இத்துடன் வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. மிவி டுயோபாட்ஸ் F40 இயர்பட்ஸ், வைட், பிளாக், கிரீன் மற்றும் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ.1,199 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இது பிளிப்கார்ட் மற்றும் MIVI தளங்களில் ரு.999 விலையில் விற்பனை செய்ய இருக்கிறது.