ஜூன் மாத சலுகைகள் ஆல்டோ, செலரியோ, ஸ்விப்ட், வேகன் ஆர் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற ஹேச்பேக் மாடல்கள், டிசையர் செடான் மற்றும் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது அரினா கார் மாடல்களுக்கு ரூ. 46 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஜூன் மாதத்திற்கென அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட வடிவில் வழங்கப்படுகின்றன.
ஜூன் மாத சலுகைகள் ஆல்டோ, செலரியோ, ஸ்விப்ட், வேகன் ஆர் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற ஹேச்பேக் மாடல்கள், டிசையர் செடான் மற்றும் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் எர்டிகா எம்.பி.வி. அல்லது CNG மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி செலரியோ:
மாருதி சுசுகி செலரியோ மாடலுக்கு ரூ. 46 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 67 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி வேகன் ஆர் மாடலுக்கும் ரூ. 46 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.2 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.
90 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலுக்கு ரூ. 32 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி பிரெஸ்ஸோ:
மாருதி சுசுகி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 31 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 796சிசி என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மாருதி சுசுகி இகோ மாடலுக்கு ரூ. 24 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகி டிசையர் மற்றும் மாருசி சுசுகி பிரெஸ்ஸா மாடல்களுக்கு ரூ. 22 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 16 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குகிறது.