இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான்-3ல் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் வருகின்ற ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
சரி சந்திரயான் 3 கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட பிறகு, இந்தியர்கள் மட்டுமல்ல, பல நாட்டு மக்களிடையே விண்வெளி அறிவியலில் குறித்த ஆர்வம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்றால் அது சற்றும் மிகையல்ல.
சந்திரயான் 3 ஏவப்பட்ட பிறகு, இஸ்ரோ வெளியிட்ட விண்கலப் படங்கள், ஏவுகணையின் ஏவுதல் குறித்த படங்கள், வீடியோக்கள் மற்றும் பல காட்சிகளை நம்மில் பலர் பார்த்திருப்போம், ஆனால் அந்த சந்திரயான் 3 விண்கலத்தைச் சுற்றி ஒரு தங்க தகடு உள்ளதே அதை யாரும் கணவனித்தீர்களா? சரி அப்படி கவனத்திருந்தால், அந்த தங்க மூலம் பூசப்பட்ட தகடு எதற்காக பொருத்தப்பட்டுள்ளது என்பதை இப்பொது தெரிந்துகொள்ளலாம்.
undefined
தங்க தகடு
மும்பையில் உள்ள நேரு கோளரங்கத்தின் இயக்குனர் அரவிந்த் பரஞ்சபே வெளியிட்ட தகவலின்படி, விண்கலத்தை சுற்றியுள்ள அந்த தகடு தங்கம் போல் தெரிகிறது, ஆனால் அது தங்கம் அல்ல, அது படலமும் அல்ல. மாறாக விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கு மீள் பூசப்பட்டிருக்கும் தங்கப் பூச்சு போல் இருப்பது மல்டி லேயர் இன்சுலேஷன் (MLI) ஆகும் என்றார். இது வெப்ப இன்சுலேட்டராக பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
நிலவை நெருங்கிய சந்திரயான் 3; வைரலாகும் விக்ரம் லேண்டர் கேமரா அனுப்பிய புகைப்படங்கள்!!
வெளிப்புற அடுக்கு தங்க நிறத்தில் இருந்தாலும், உள்ளே வெள்ளை மற்றும் வெள்ளி அடுக்குகள் உள்ளன என்று அரவிந்த் கூறினார். இந்த தகடு போன்ற அமைப்பு கோல்டன் ஃபிலிம் பாலியஸ்டரால் மிக மெல்லிய அலுமினிய அடுக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று மேலும் அரவிந்த் கூறினார்.
முழு விண்கலமும் இவற்றால் மூடப்படாது என்றும், கதிர்வீச்சுக்கு ஆளாகும் போது சேதமடைய வாய்ப்புள்ள பாகங்கள் மட்டுமே இவற்றால் மூடப்படும் என்றும் ஆவர் கூறினர். பூமியிலிருந்து வெளியே விண்கலம் பயணிக்கும்போது வெப்பநிலை மாறுகிறது. இந்த மாற்றங்கள் விண்கலத்தின் உணர்திறன் கருவிகளைப் பாதிக்கின்றன. வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் சில நேரங்களில் உபகரணங்கள் வேலை செய்வதை நிறுத்தலாம்.
அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, சாதனங்கள் இந்த வெப்ப அடுக்குகளால் மூடப்பட்டிருக்கும். விண்கலத்தை வெப்பப் பூச்சுகளுடன் மூடுவது பற்றிய முழுமையான தகவல்கள் அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய சுற்றுச்சூழல் செயற்கைக்கோள் தரவு, தகவல் சேவையில் உள்ளன என்றும் அவர் கூறினர்.
அதன்படி... செயற்கைக்கோள் அல்லது விண்கலம் எப்படி விண்வெளியில் பயணிக்கும், அவை எங்கே இருக்கும், சூரிய ஒளியில் எவ்வளவு வெளிப்படும், எந்தெந்த வெப்பநிலையை எதிர்கொள்ளும் என்ற விவரங்களின் அடிப்படையில் எம்எல்ஐ தாள்கள் தயாரிக்கப்படுகின்றன.
அவை -200 டிகிரி சென்டிகிரேட் முதல் -300 டிகிரி சென்டிகிரேட் வரையிலான வெப்பநிலையில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த MLI தாள்கள் கதிர்வீச்சு மற்றும் வெப்பத்திலிருந்து மட்டுமல்ல, விண்வெளியில் உள்ள தூசியிலிருந்தும் விண்கலத்திற்கு பாதுகாப்பை வழங்குகின்றன என்றார் அவர்.
சந்திரயான்-3 நிலவு தரையிறங்க சாதகமான சூழல் இல்லாவிட்டால் என்ன ஆகும்? இஸ்ரோ அதிகாரி விளக்கம்