மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற உலகளாவிய நிறுவனங்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற பிற ஒழுங்குபடுத்தப்படாத தளங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்புவதன் மூலம் சட்டப்பூர்வமான தொலைத்தொடர்பு வழியைத் தவிர்க்கின்றன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் முன்பு எஸ்.எம்.எஸ். (SMS) மூலம் அனுப்பிவந்த ஆர்டர் அப்டேட்டுகளை வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் அனுப்பத் தொடங்கியிருக்கின்றன. இதனால், வேறு சில நிறுவனங்களும் இதேபோல எஸ்.எம்.எஸ். அப்டேட்டுகளைக் கைவிட்டுவிட்டன.
அமேசான் உள்ளிட்ட ஷாப்பிங் நிறுவனங்கள் எடுத்துள்ள இந்த முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள்தான். ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான செல்லுலார் ஆப்ரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (COAI) தொலைத்தொடர்புத்துறை செயலர் நீரஜ் மிட்டலுக்கு கடிதம் எழுதியுள்ளது.
undefined
அக்டோபர் 31ஆம் தேதி அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற உலகளாவிய நிறுவனங்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற பிற ஒழுங்குபடுத்தப்படாத தளங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்புவதன் மூலம் சட்டப்பூர்வமான தொலைத்தொடர்பு வழியைத் தவிர்க்கின்றன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது உரிமம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகும் என்றும் இதன் மூலம் வருவாய் இழப்பும் அந்நிய செலாவணி வருவாய் இழப்பும் ஏற்படும் என்றும் கடிததில் கூறப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இதனால் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் COAI முறையிட்டுள்ளது.
"வாட்ஸ்அப், டெலிகிராம் போன்றவற்றின் வழியான வணிகத் தகவல்களை அனுப்புவதை முறைகேடாக அறிவிக்க வேண்டும்" என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் பேமெண்டுகளைச் சரிபார்ப்பதற்கு நேரக் கட்டுப்பாடுடன் OTP அனுப்புவதற்கும் எஸ்எம்எஸ் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை கட்டுப்படுத்தாமல் இருப்பது சட்டவிரோத சக்திகள் இந்த வழியைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாகும் என்றும் இதனால் தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என்றும் செல்லுலார் ஆப்ரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (COAI) அனுப்பிய கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.