OpenAI இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மீரா முராட்டி நியமனம்; யார் இவர்?

By Dhanalakshmi GFirst Published Nov 18, 2023, 10:29 AM IST
Highlights

முன்பு OpenAI தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக திரைக்குப் பின்னால் பணி புரிந்து வந்தவர்தான் மீரா முராட்டி. தற்போது இவர் OpenAI இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2022 ஆம் ஆண்டில் ChatGPT அறிமுகம் ஆனபோது ஸ்டாராக அனைவரின் கண்ணுக்கும் தெரிந்தவர் சாம் ஆல்ட்மேன். ChatGPT என்றால் என்ன? அதன் பயன்பாட்டை உலகிற்கு தெரியப்படுத்தியவர். தற்போது அவர்மீது நம்பிக்கை இல்லை என்று அவரை தலைமை நிர்வாக பதவியில் இருந்து OpenAI நிறுவனம் நீக்கியுள்ளது. ChatGPT பல்வேறு செயற்கை திறன்களைக் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட். கவிதை மற்றும் கலை வேலைப்பாடுகள் தொடர்பான தகவல்களை வினாடிகளில் வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

சிலிக்கான் வேலியில் உதித்த புதிய நட்சத்திரமான சாம் ஆல்ட்மேன் உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களைச் சந்திக்க உலகம் முழுவதும் பயணம் செய்து AI தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார். பல்வேறு மேடைகளில் பேசி இருந்தார். சமூகத்தில் AI கொண்டு வர இருக்கும் தாக்கங்கள் குறித்து விவாதித்தார். 

தற்போது, ஆல்ட்மேனின் நீக்கம் தொழில்நுட்ப உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த திடீர் பதவி நீக்கம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

சொதப்பிவிட்டோம்... ஆண்டிராய்டு டாப்லெட்டில் நடந்த தவறு என்ன? சுந்தர் பிச்சை ஓபன் டாக்!

மீரா முராட்டி பேட்டி:

ஆல்ட்மேனுக்கு பதிலாக அவரது இடத்தில் நியமிக்கப்பட்டு இருப்பவர் மீரா முராட்டி. இவர் டைம் இதழுக்கு முன்னதாக அளித்த பேட்டியில், ChatGPT உடன் பணிபுரியும் போது எதிர்கொள்ளும் சவால்கள், கல்வி, சமூகத்தில் AI தொழில்நுட்பத்தின் சாத்தியமான தாக்கம் குறித்து பேசி இருந்தார். ChatGPT மொழி மாதிரிகள் போன்ற சவால்களை எதிர்கொள்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும், போலியான, பொய்யான தகவல்களை AI தொழில்நுட்பம் கொடுக்கும் என்ற வருத்தத்தையும் தெரிவித்து இருந்தார். தற்போதைய பிரச்சனையே இந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் தவறுகளை நீக்குவதுதான். இந்த தொழில்நுட்பம் தற்போது ஆய்வில் தான் இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

யார் இந்த மீரா முராட்டி:
* இனி இவர்தான் Open AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. வயது 34. இவர் ஒரு பொறியாளர்.

* ChatGPT தொழில்நுட்பம், DALL-E தொழில்நுட்பங்களை உருவாக்கியதில் முக்கிய பொறுப்பு வகித்தவர். 

* அல்பானியா நாட்டைச் சேர்ந்தவர். அல்பானியா பெற்றோருக்கு பிறந்தவர். தனது 16 வயதில் கனடா சென்று படித்தார். 

*இதையடுத்து கோல்டுமேன் சாக்ஸ், ஜோடியாக் ஏரோஸ்பேஸ், டெஸ்லா ஆகியவற்றில் பணியாற்றி இருக்கிறார். 

* லீப் மோசன் நிறுவனத்தில் துணைத் தலைவராக 2016-ல் பணியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் பணிக்குப் பின்னர் ராஜினாமா செய்துவிட்டு OpenAI நிறுவனத்தில் துணைத் தலைவர் பதவியில் சேர்ந்தார். இங்கு 2022-ல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 

* மீரா முராட்டிக்கு இத்தாலி, அல்பானியா, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் தெரியும்.

* ChatGPT விநியோகம் தொடர்பான பொறுப்பு மீரா முராட்டியிடம் வழங்கப்பட்டது.

* AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தப்படலாம் மற்றும் மோசமான பேர்வழிகளால்  பயன்படுத்தப்படலாம் என்று ஏற்கனவே மீரா முராட்டி எச்சரித்து இருந்தார். 

ChatGPT - OpenAI வேறுபாடு:
ChatGPT மற்றும் OpenAI இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று அவற்றின் நோக்கம் மட்டுமே. ChatGPT மனிதனின் பதில்களை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் OpenAI பல்வேறு வகையான இயந்திர கற்றல் மாதிரிகளை பரிசோதிக்க உருவாக்கப்பட்டது. 

OpenAI நிறுவியது யார்?

OpenAI என்பது ஒரு தனியார் ஆராய்ச்சி ஆய்வகம். இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்கும் வழிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்கி இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தை 2015 -ல் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் பலரால்  நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது.

1 நொடியில் 150 திரைப்படங்களை டவுன்லோட் செய்யலாம்.. உலகின் அதிவேக இன்டர்நெட்.. மாஸ் காட்டிய சீனா

click me!