மாத்தி மாத்தி 20 போன்களை பயன்படுத்தும் சுந்தர் பிச்சை! கூகுள் சி.இ.ஓ. சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

By SG Balan  |  First Published Feb 26, 2024, 1:28 PM IST

சுந்தர் பிச்சை, ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட போன்களை வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக கூறினார். "நான் தொடர்ந்து ஒவ்வொரு புதிய ஃபோனையும் முயற்சித்து வருகிறேன்" என்று கூறினார்.


2021ஆம் ஆண்டு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பிபிசிக்கு அளித்த பேட்டி தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அதில் அவர் மொபைல் போன் பயன்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நேர்காணலில் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, அவர் பயன்படுத்தும் தொலைபேசிகளின் எண்ணிக்கை, அவரது கடவுச்சொல் பழக்கம், சுதந்திரமான பேச்சு உரிமை ஆகியவை குறித்து பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

அவர் பயன்படுத்தும் போன்களின் எண்ணிக்கையில் குறித்துக் கேட்டதற்கு சுந்தர் பிச்சை, ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட போன்களை வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக கூறினார். "நான் தொடர்ந்து ஒவ்வொரு புதிய ஃபோனையும் முயற்சித்து வருகிறேன். அதை நான் எப்போதும் சோதித்து வருகிறேன்," என்று அவர் கூறினார்.

இந்த நேர்காணல் 2 வருடங்களுக்குப் பின் தற்செயலாக, இப்போது வெளியாகி இருப்பதால், அவர் இப்போது பயன்படுத்தும் தொலைபேசிகளின் எண்ணிக்கை  தெரியவில்லை. ஆனால் ஆண்ட்ராய்டு உலகளவில் கிட்டத்தட்ட 75% சாதனங்களில் இருக்கும் மிகவும் பிரபலமான இயங்குதளமாக இருக்கிறது என்பதால் கூகுள் CEO இன்னும் நிறைய மொபைல்களை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

பாஸ்வேர்டு பற்றி பேசிய பிச்சை, தான் அடிக்கடி கடவுச்சொல்லை மாற்றுவதில்லை என்று கூறினார். அனைவரும் தங்கள் பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றுவதற்குப் பதிலாக 2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை பயன்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைத்தார். பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றுவதை விட இந்த முறைய மேலும் பாதுகாப்பானது என்று அவர் கூறினார்.

அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றும்போது, ​​அவற்றை நினைவில் கொள்வதில் உங்களுக்கு அடிக்கடி சிக்கல் இருக்கும், மேலும் நீங்கள் அவற்றைக் குழப்பிக்கொள்ளலாம். 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையை பயன்படுத்தினால் எப்போதும் நல்லது என்று அவர் சொல்கிறார்.

இணைய சுதந்திரத்தைப் பற்றிப் பேசிய சுந்தர் பிச்சை, "இலவச இணைய சேவை நன்மைகளை உண்டாக்கும் மிகப்பெரிய சக்தி என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

click me!