கூகுள் குரோம் பயனர்கள் உஷாரா இருக்கணும்! மத்திய அரசின் எச்சரிக்கையின் என்ன சொல்றாங்க?

By SG Balan  |  First Published Feb 25, 2024, 10:00 AM IST

மத்திய அரசின் இணையப் பாதுகாப்பு நிறுவனமான கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-in) கூகுள் குரோமில் பல பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவை "அதி தீவிரமானவை" என்றும் கூறியுள்ளது.


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசர் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இணையப் பாதுகாப்பு நிறுவனமான கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-in) கூகுள் குரோமில் பல பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவை "அதி தீவிரமானவை" என்றும் கூறியுள்ளது.

CERT-in மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சைபர் செக்யூரிட்டி ஏஜென்சியாகும். இந்நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், தனிப்பட்ட தரவுகளைத் திருடுவதற்கும், கம்ப்யூட்டரை தன்னிச்சையான இயக்குவதற்கும் ஹேக்கர்கள் கூகுள் குரோம் பிரசவுசரை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த எச்சரிக்கையானது கூகுள் குரோம் டெஸ்க்டாப் பதிப்பில் காணப்படும் பல பாதிப்புகளுடன் தொடர்புடையது என்பதும குறிப்பிடத்தக்கது. Linux மற்றும் Mac கம்ப்யூட்டர்களில் 122.0.6261.57 க்கு முந்தைய வெர்ஷன்களிலும், Windows கணினியில் 122.0.6261.57/58 க்கு முந்தைய வெர்ஷன்களிலும் பாதிப்புகள் உள்ளன.

கூகுள் குரோம் பிரவுசரில் உள்ள பாதிப்புகளை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்க வெப் பிரசவுரை பயனர்கள் சமீபத்திய அப்டேட் வரை செய்து புதுப்பித்துக்கொள்வது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

அப்டேட்டுகள் வெளியானவுடன் உடனுக்குடன் அவற்றை டவுன்லோட் செய்து அப்டேட் செய்துகொள்வதன் மூலம் பிரவுசரை பாதுகாப்பான பயன்படுத்தலாம் என்றும் CERT-in கூறியுள்ளது.

குரோம் பிரவுசர் ஆட்டோ-அப்டேட் வசதியை ஆன் செய்து வைத்திருந்தால், தானாகவே புதிய அப்டேட்களை பதிவிறக்கம் செய்து நிறுவிவிடும். அப்டேட் செய்தபின் பிரவுசரை க்ளோஸ் செய்துவிட்டு மீண்டும் திறக்குமாறு கூறுவதைக் காணலாம். ஆட்டோ அப்டேட் வசதியை பயன்படுத்தாத பயனர்கள் அடிக்கடி அப்டேட் இருக்கிறதா என்று பார்த்து, புதிய வெர்ஷன் இருந்தால் உடனடியாக இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

click me!