‘வாட்ஸ் அப்’ பயனர்களை வகை வகையாய் அசத்த வரும் புதிய வசதி! என்னென்ன தெரியுமா?

 |  First Published Feb 15, 2018, 12:24 PM IST
WhatsApp working on new data privacy feature for users Report



வாட்ஸ் அப் சாட்டில், குழு அழைப்பு (குரூப் காலிங்) வசதியை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம் தற்போது அதில் இன்னும் மேம்படுத்தப்பட்ட வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

சமூக வலைத்தளங்களின்றி அமையாது உலகு என்ற ரீதியில், உலகம் முழுவதும் உடனுக்குடன் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளால் அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஸ்மார்ட் ஃபோன்களை வைத்திருப்பவர்களில் வாட்ஸ் அப் செயலி இல்லாத ஒருவரை, இன்றைய தொழில்நுட்ப உலகில் பார்ப்பது கடினம் என்று சொல்லிவிடலாம். அறிவியல் முன்னேற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மனிதர்களை தொழில் நுட்பத்திற்கு அடிமையாக மாற்றி வருகிறது.

வாட்ஸ் அப் செயலி மூலமாக, மெசேஜ், ஃபோட்டோ, வீடியோ, வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால் என எந்த வகையில் வேண்டுமானாலும் நொடிப் பொழுதில் பிறருக்கு தெரியப் படுத்தலாம். அதனுடன், குரூப் சேட்டிங், எமோஜி வசதி, வாய்ஸ் சேட்டிங் என பல வசதிகள் பயனர்களைக் கவர, அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வாட்ஸ் அப் நிறுவனம், சமீபத்தில் குரூப் காலிங் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த குரூப்பில் 2 நபர்களுடன் மட்டுமே வாய்ஸ் காலிங்கில் பேசக்கூடிய வசதி இருந்தது. தற்போது, இந்த வெர்ஷன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் காலிங் வசதி மூலமாக ஒரே நேரத்தில் மொத்தம் 4 நபர்கள் கலந்துரையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்ஷன் 2.18.39. ல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் இந்த அப்டேட் வெர்ஷனை ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்திய மெசேஜ் டெலிட்டிங் வசதி, பயனர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு மெசேஜை அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் அதனை டெலிட் செய்து விடலாம். தவறாக அனுப்பப்படும் மெசேஜ்களை அழிக்க இந்த வசதி வெகுவாக பயன்பட்டு வருகிறது.

click me!