வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் புது அம்சம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் செயலி உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. முன்னணி குறுந்தகவல் செயலியாக இருந்து வரும் வாட்ஸ்அப்பில் அடிக்கடி புது அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புது அப்டேட்கள் வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே உள்ள பிழைகளை சரி செய்து, புது அம்சங்களை வழங்கும்.
அந்த வகையில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் புது அம்சம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி வாட்ஸ்அப் செயலியில் சாட் செய்ய காண்டாக்ட்களை சேவ் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கமாக வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களுடன் உரையாட காண்டாக்ட் மொபைல் போனில் சேமித்து வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
புதிய அம்சம்:
எனினும், ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் புது அம்சம் இந்த நடைமுறையை மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மெசேஜில் அன்-சேவ்டு காண்டாக்ட் ஆப்ஷனை கிளிக் செய்யும் போது புதிதாக பாப்-அப் ஆப்ஷன் காணப்படுகிறது.
சில பீட்டா பயனர்களுக்கு அதிகபட்சம் 2GB வரையிலான மீடியா ஃபைல்களை அனுப்பும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டதை தொடர்ந்து சேவ் செய்யப்படாத காண்டாக்ட்களுக்கும் குறுந்தகவல் அனுப்பும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர வாட்ஸ்அப் பீட்டா செயலியில் ஏற்கனவே வாய்ஸ் நோட் அம்சத்தை மேம்படுத்தும் ஆப்ஷ்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
எளிமையான சாட்:
புதிய அம்சம் மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. இதை கொண்டு ஒருவரின் காண்டாக்ட் நம்பரை சேவ் செய்யாமலேயே அவருடன் சாட் செய்ய முடியும். மேலும் இது மிக எளிதில் அதிவேகமாகவும் செய்யக்கூடிய காரியம் ஆகும். உலகின் பிரபல குறுந்தகவல் செயல் என்பதால், இது பலருக்கும் அதிக நேரத்தை மிச்சப்படுத்தும் அம்சமாகவும் இருக்கிறது.
முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் அப்டேட்டில் கிடைக்க மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. மேலும் வாட்ஸ்அப் செயலியின் அடுத்த அப்டேட்டில் இந்த அம்சம் வழங்குவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு தான்.