Poco X4 Pro: கம்மி விலையில் போக்கோ 5ஜி போன்... சூப்பர் சலுகைகளுடன் விற்பனை தொடக்கம்..!

By Kevin Kaarki  |  First Published Apr 5, 2022, 12:10 PM IST

Poco X4 Pro: போக்கோ X4 ப்ரோ 5ஜி மாடல் லேசர் பிளாக், லேசர் புளூ, போக்கோ எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.


போக்கோ X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (ஏப்ரல் 5) விற்பனைக்கு வருகிறது. புதிய போக்கோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது போக்கோ X3 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 120Hz சூப்பர் AMOLED டிஸல்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிரபாகன் 695 பிராசஸர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பாடி மற்றும் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. மெமரியை பொருத்தவரை இந்திய சந்தையில் புதிய போக்கோ X4 ப்ரோ 5ஜி மாடல் 6GB ரேம், 64GB மெமரி, 6GB ரேம், 128GB மெமரி மற்றும் 8GB ரேம், 128GB மெமரி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. போக்கோ X4 ப்ரோ 5ஜி மாடல் லேசர் பிளாக், லேசர் புளூ, போக்கோ எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

போக்கோ X4 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

- 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
- 6GB LPDDR4x ரேம், 64GB UFS 2.2 மெமரி
- 6GB LPDDR4x ரேம், 128GB UFS 2.2 மெமரி 
- 8GB LPDDR4x ரேம், 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13
- 64MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 16MP செல்ஃபி கேமரா
- 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 3.5mm ஹெட்போன் ஜாக்
- 5000mAh பேட்டரி
- 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய போக்கோ X4 ப்ரோ 5ஜி 6GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடலின் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய போக்கோ X4 ப்ரோ 5ஜி மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெற முடியும்.

click me!