KYN என்ற செயலியின் தலைப்பு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அறிந்துகொள்ளுங்கள் என்பதன் சுருக்கம் ஆகும். இது ஹைப்பர் லோக்கல் சமூகத்திற்குள் தடையற்ற தகவல்தொடர்புகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கே.ஒய்.என் என்ற புதிய ஹைப்பர் லோக்கல் சமூக ஊடக மொபைல் அப்ளிகேஷனை கைன்ஹுட் டெக்னாலஜீஸ் (Kynhood Technologies) என்ற நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த மொபைல் செயலியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
KYN என்ற செயலியின் தலைப்பு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அறிந்துகொள்ளுங்கள் என்பதன் சுருக்கம் ஆகும். இது ஹைப்பர் லோக்கல் சமூகத்திற்குள் தடையற்ற தகவல்தொடர்புகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளியீட்டு நிகழ்வில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தொழில்நுட்பம் பல தனிநபர்களுக்கும், சமூகத்திற்கும், நாடுகளுக்கும் பல நன்மைகளைக் கொண்டுவந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வித்துறையில் அறிவுத் தேடலுக்கான வாய்ப்புகளை அது பெரிதும் ஜனநாயகப்படுத்தியுள்ளது" என்று கூறினார்.
2028-ல் சந்திரயான் 4! நிலவில் இருந்து பாறைக் கற்களை எடுத்துவர இஸ்ரோ திட்டம்!
"உள்ளூர் வணிகம், உள்ளூர் திறமைகள், உள்ளூர் சமூகங்கள் இணைவதற்கான இடத்தைக் கொடுக்கக்கூடிய இந்த சமூக வலைத்தளத்தில், ஆரோக்கியமான பொருளாதாரம், ஆரோக்கியமான இணையப் பயன்பாடு மற்றும் ஆரோக்கியமான சமூகத்தைக் காணத் தொடங்குவோம் என்று நம்புகிறேன்" என்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இந்த செயலியை அறிமுகம் செய்துள்ள கைன்ஹுட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. காயத்ரி தியாகராஜன், “ஹைப்பர் லோக்கல் சமூகத்திற்கான டிவி, அச்சு மற்றும் சமூக ஊடகங்களை ஒன்றாக இணைக்கும் ஒரே தளம் KYN ஆகும். எங்களின் முதல் சந்தையான சென்னை, 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
"KYN என்பது கலை, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற திறமைகளை ஊக்குவிப்பதற்காக மட்டுமல்லாமல், வீட்டுத் தொழில்முனைவோர் மற்றும் அக்கம்பக்கங்களில் உள்ள சிறு வணிகங்கள் தங்கள் சந்தையை வளர்க்கவும் உதவும். இது அவர்களின் தொழிலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிராண்டுகள் ஒவ்வொரு ஹைப்பர்லோகல் மண்டலத்திலும் தங்கள் சலுகைகள் குறித்து விளம்பரப்படுத்த சிறந்த வாய்ப்பை வழங்குகிறோம்" என்றார்.
அனைத்தும் பயனர்களுக்கும் உயர்தர பொழுதுபோக்கையும் அக்கம்பக்கத்தில் உள்ள அனைத்தையும் பற்றிய தகவல்களையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
மிரட்டலான லுக்... பக்காவான அப்டேட்ஸ்... புதிய பஜாஜ் பல்சர் NS 160, NS200 பைக் அறிமுகம்!
KYN முக்கிய அம்சங்கள்
- ஐபோன் மற்றும் ஆண்டிராய்டு மொபைல்களில் ஆப் ஸ்டோர் மூலம் இந்த அப்ளிகேஷன் கிடைக்கும்.
- தினசரி நிகழ்வுகளை எங்கிருந்தும் அனைத்து லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோவாக பார்க்கலாம்.
- பயனர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், தங்கள் குரலை நிலைநாட்டவும், எழுதும் திறனைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் தளம் பயன்படும்.
- இந்தச் செயலி மூலம் பயனர்கள் தங்கள் சமூகத்தின் குரலாக இருக்க முடியும். வேறு எந்த சமூக வலைத்தளத்தையும் விட வேகமாக உள்ளூர் சமூகத்தில் பிரபலமடையலாம்.
- மார்க்கெட் ப்ளேஸ் என்ற வசதியை உள்ளூர் வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி கார் வரப்போகுது! ஹூண்டாய், மாருதி தாக்குப் பிடிக்குமா?