2028ஆம் ஆண்டில் சந்திரயான்-4 விண்ணில் ஏவப்படும் என்றும் இத்திட்டம் வெற்றி பெற்றால் நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
சந்திரயான் 3 பயணத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் அடுத்த நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 4 பயணத்திற்கு தயாராகி வருகிறது. சந்திரயான் 4 வரும் 2028ஆம் ஆண்டில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் (எஸ்ஏசி) டாக்டர் நிலேஷ் தேசாய் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சந்திரயான்-4 விண்கலம் 2028 இல் ஏவப்படும் என்றும் அது லூபெக்ஸ் மிஷன் என்றும் அழைக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
சந்திரயான்-3 வெற்றி மூலம் அடைந்த அனுபவத்தைக் கொண்டு சந்திரயான்-4 திட்டத்தை உருவாக்குகிறது. சந்திரயான்-4 வெற்றி பெற்றால், நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியாவை உருவாக்கும்.
இந்திய விண்வெளி நிறுவனம் 2040ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. "நிலவுக்கு மனிதனை அனுப்ப அடுத்த 15 வருடங்கள் உள்ளன" என்று நிலேஷ் தேசாய் எடுத்துரைத்தார்.
மோடி வருகையைக் கொண்டாட குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்ட ரோஹினி சவுண்டிங் ராக்கெட்!
சந்திரயான் 4 பயணம் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்கி பாறை மாதிரிகளை சேகரிக்கும் நோக்கம் கொண்டது. சேகரிக்கப்படும் மாதிரி பகுப்பாய்வுக்காக பூமிக்கு திரும்ப எடுத்துவரப்படும். அதன் மூலம் நிலவில் உள்ள வளங்கள் குறித்தும் எதிர்கால நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய முடியும்.
சந்திரயான்-4 அதன் முன்னோடியான சந்திரயான்-3 உடன் ஒப்பிடும்போது அதிக தூரம் கடக்கும் திறன் கொண்ட 350 கிலோ எடையுள்ள ரோவரைக் கொண்டிருக்கும். இதுவரை ஆராயப்படாத நிலவின் அபாயகரமான பள்ளங்களில் சந்திரயான்-4 லேண்டர் பணிபுரியும்.
இந்தியாவின் ஹெவி-லிஃப்ட் ராக்கெட்களான GSLV Mk III அல்லது LVM3 ராக்கெட் சந்திரயான்-4 ஐ விண்ணில் ஏவுவதற்கு பயன்படுத்தப்படும். இத்திட்டத்தின் வெற்றி நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டுவருவதில் தான் இருக்கிறது. இது தொழில்நுட்ப ரீதியாக சவாலான முயற்சி. இதற்கு விண்கலத்தை இரண்டு முறை ஏவ வேண்டியிருக்கும். தரையிறக்கம் சந்திரயான்-3 போலவே இருக்கும். ஆனால் மையத் தொகுதி மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவரும்.
நிலவின் மேற்பரப்பில் இருந்து ஒரு விண்கலம் மேலே உந்திச் செல்ல முடியும் என்பதை சந்திரயான்-3 லேண்டர் மூலம் இஸ்ரோ ஏற்கெனவே சோதித்துப் பார்த்துள்ளது. இதற்காக ஹாப் என்ற பரிசோதனையை விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக மேற்கொண்டது. மேலும் சந்திரயான்-3 ஆர்பிட்டர் நிலவில் இருந்து பூமிக்கு திரும்பியது. திரும்பும் பாதையையும் உறுதி செய்திருக்கிறது.
மக்கள் பணத்தில் சீன ராக்கெட் விளம்பரம்! திமுகவை கிழித்துத் தொங்க விட்ட பிரதமர் மோடி!