இப்படி கூட Birthday wish பண்ணலாமா ?

By Dinesh TGFirst Published Oct 31, 2022, 7:56 PM IST
Highlights

உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்களுக்கு வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவிக்க ஒரு அட்டகாசமான டிப்
 

ட்ரெண்டிங் உலகில் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்தினை பல வகையில் தெரிவிக்கின்றனர். இதற்காக பல ஆப்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளன. அவ்வாறு மூன்றாம் தரப்பு செயலியை இன்ஸ்டால் செய்யும் போது போனின் ஸ்டோரேஜூம் காலியாகும், உங்கள் தரவுகளும் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

இப்படியான நிலையில், வெறும் சில கிளிக்குகளில் உங்கள் நண்பர்களுக்கான பிறந்தநாள் வாழ்த்தை வழங்கும் https://www.1happybirthday.com என்ற ஒரு இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் பிறந்த நாள் வாழ்த்தை  அட்டகாசமான முறையில் அவர்களுக்கு தெரிவிக்கலாம். இதற்காக எந்த ஒரு மூன்றாம் தரப்பு அப்ளிகேஷனும் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள டீஃபால்ட் அப்பிளிக்கேஷனான கூகுள் குரோமை பயன்படுத்தி நொடியில் அட்டகாசமான பிறந்த நாள் வாழ்த்தை உருவாக்கலாம்.

இதற்கு முதலில் உங்கள் கூகுள் குரோமிற்கு செல்லவும்.  அதிலுள்ள சர்ச் பாரில் 1 ஹேப்பி பெர்த் டே ( 1 Happy BIrthday ) என டைப் செய்து https://www.1happybirthday.com/  என்ற லிங்கிற்கு செல்லவும். அதில் ஃபைன்ட் யுவர் நேம் ( Find Your Name ) என்பதை தேர்வு செய்து உங்கள் நண்பர் அல்லது உறவினரின் பெயரை உள்ளிடவும்.

Youtube Tips: இப்படி கூட யூடியூப்பை பயன்படுத்தலாம் செய்யலாம்!

பின் சர்ச் பட்டனை க்ளிக் செய்யவும். இதன் பிறகு நீங்கள் உள்ளிட்ட பெயருக்கு சம்மந்தமான பெயர்களின் பட்டியல் உங்கள் ஸ்க்ரீனில் தோன்றும். நீங்கள் உள்ளிட்ட பெயரை சரி பார்த்து அந்த பெயரில் க்ளிக் செய்த உடன்  உங்களுக்கான பிறந்த நாள் வாழ்த்து தயாராகிவிடும். 

பிறகு அதில் பிளே பெர்த் டே சாங் ( Play birthday song ) , டவுன்லோட் சாங் ( Download song ) , ஈமெயில் சாங் நவ் ( Email song Now ) , ஷேர் SMS/Text/WhatsApp/Facebook போன்ற நான்கு ஆப்ஷன்கள் தோன்றும். அதில் டவுன்லோட் சாங் என்பதை தேர்வு செய்தால், நீங்கள் எண்டர் செய்த பெயரை கொண்ட  பிறந்தநாள் பாடல் தயாராக இருக்கும். இதை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி புதுமையான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கலாம்.
 

click me!