
நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi) மட்டும்தான் இந்தியாவில் 5G சேவையை இன்னும் தொடங்காத ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. 5ஜி நெட்வொர்க்கை வணிக ரீதியாகத் தொடங்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
வோடபோன் ஐடியா பிராண்டை ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் இங்கிலாந்தின் வோடபோன் குரூப் ஆகியவை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. ஜியோ, ஏர்டெல் போன்ற சக போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க Vi கடுமையாகப் போராடி வருகிறது. 5G சேவை தாமதமாவதற்கு அதற்குத் தேவையான தொழில்நுட்பச் செலவுகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினைதான் என்று கூறப்படுகிறது.
நான்கு விற்பனையாளர்களுடன் நான்கு வட்டங்களில குறைந்தபட்சமாக MRO தேவையை நிறைவு செய்துள்ளது. இதையே மும்பை பங்குச் சந்தையில் (BSE) தாக்கல் செய்த சமீபத்திய முதலீட்டாளர் அறிக்கையிலும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்! 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்!
90% டைம் டிவிஷன் டூப்ளக்ஸ் (TDD) ரேடியோக்கள் 5G சேவைக்குத் தயாராக உள்ளன. அனைத்து புதிய பேஸ்பேண்டுகளும் 5G திறன் கொண்டவையாக உள்ளன. கிளவுடிஃபிகேஷன் ஆஃப் கோர், டிஎஸ்ஆர், ஓபன் ரன் போன்ற 5ஜி தொழில்நுட்பங்களும் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இதற்காக சோதனைகளும் நடைபெற்றுள்ளன.
"5G சேவை தொடங்கியதும் முதல் 24 முதல் 30 மாதங்களில் 40% வருவாயை ஈடுகட்ட இலக்கு வைத்துள்ளோம்" என்று Vi தனது முதலீட்டாளர் கூறியுள்ளது. போதுமான மிட்-பேண்ட் mmWave 5G ஸ்பெக்ட்ரம் நிறுவனத்திடம் உள்ளது என்றும் கூறியிருக்கிறது. இது தவிர வி ஏர் ஃபைபர் (Vi AirFiber) என்ற ஹோம் பிராட்பேண்ட் சேவையையும் சோதித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது.
உயர் செயல்திறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட பிராட்பேண்ட், டேட்டா, வாய்ஸ் கால் சேவைகளைக் கையாள 5G அல்லாத கோர் நெட்வொர்க்கை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அனைத்து 4G வாடிக்கையாளர்களையும் 5G நெட்வொர்க்கிற்கு மாற்றுவதற்குப் போதுமான ஸ்பெக்ட்ரம் உள்ளது என்று Vi தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதியின் பாராட்டைப் பெற்ற சமையல்காரரின் மகள்! காரணம் என்ன தெரியுமா?
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.