Vivo T1 5G price : குறைந்த விலை விவோ 5ஜி ஸ்மார்ட்போன் - சூப்பர் சலுகைகளுடன் விற்பனை துவக்கம்

By Kevin Kaarki  |  First Published Feb 14, 2022, 11:59 AM IST

விவோ  நிறுவனத்தின் புதிய T1 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம். 


விவோ T1 5ஜி ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை துவங்கியது. இந்த ஸ்மார்ட்போன் விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டார்லைட் பிளாக் மற்றும் ரெயின்போ ஃபேண்டசி நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB+128GB விலை ரூ. 15,990 என்றும் 6GB+128GB விலை ரூ. 16,990 என்றும் 8GB+128GB விலை ரூ. 19,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ T1 5ஜி மாடலில் 6.58 இன்ச் ஃபுல் HD+LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5 லேயர் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், 14451mm² அளவில் பெரிய கூலிங் சர்ஃபேஸ் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

விவோ T1 5ஜி அம்சங்கள்

- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ 120Hz LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8nm பிராசஸர் 
- அட்ரினோ 619L GPU
- 4GB / 6GB / 8GB ரேம்
- 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
- 2MP டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- சூப்பர் நைட் மோட் (6GB/8GB ரேம் மாடல்களில் மட்டும்)
- 16MP செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5G SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0, GPS/ GLONASS/ Beidou, NFC
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

click me!