அன்லிமிடெட் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை கார்மின் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது.
கார்மின் இன்ஸ்டின்ட் 2 சோலார் மற்றும் D2 Air X10 ஏவியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கார்மின் இன்ஸ்டின்ட் 2 சோலார் ஸ்மார்ட்வாட்ச் இருவித அளவுகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அன்லிமிடெட் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இது சூரிய சக்தி மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் என்பதால் அன்லிமிடெட் பேட்டரி பேக்கப் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் சோலார் சார்ஜிங் அம்சம் இன்றியும் விற்பனை செய்யப்படுகிறது. D2 Air X10 ஏவியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் விமானிகளுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் pre-flight, in-flight மற்றும் post-flight ஏவியேஷன் டூல்கள், ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் சார்ந்த அம்சங்களை வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
கார்மின் இன்ஸ்டிண்ட் 2 சோலார் ஸ்மார்ட்வாட்ச் 45mm மற்றும் 40mm என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை 449 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 33,800 என துவங்குகிறது. இதன் சர்ஃப் எடிஷன் விலை 399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 25,500 என துவங்குகிறது. சோலார் சார்ஜிங் இல்லாத மாடல் விலை 349 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 26,300 என துவங்குகிறது. இதன் கேமோ மற்றும் சர்ஃப் எடிஷன்கள் விலை 399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 25,500 என துவங்குகிறது.
இன்ஸ்டிண்ட் 2 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் எலெக்ட்ரிக் லைம், நியோ டிராபிக் மற்றும் பாப்பி போன்ற நிறங்களில் கிடைக்கிறது. கார்மின் D2 Air X10 மாடல் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 549 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 41,300 என துவங்குகிறது.