Vivo T3x 5G : விவோ நிறுவனம் தனது புதிய போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கைபேசியின் முக்கிய அம்சங்கள், அதன் வடிவமைப்பு உட்பட, அதிகாரப்பூர்வமாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட Vivo T3 5Gன் வரிசையில் இந்த புதிய கைபேசி இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விவோவின் நிலையான t3 5G மாடல் ஒரு MediaTek Dimensity 7200 SoC மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. Vivo T3x 5G ஆனது, ஏப்ரல் 2023ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo T2x 5Gன் Upgrade செய்யப்பட்ட மாடலாகும்.
Vivo T3x 5G விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று விவோ இந்தியா தனது X பக்கத்தில் அறிவித்துள்ளது. Flipkart தலத்தில் ஏப்ரல் 19 முதல் 22ம் தேதிக்குள் இந்த போன் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவோ வெளியிட்ட ஒரு டீசரில், இந்த புதிய தொலைபேசி பளபளப்பான சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
undefined
Vivo T3x 5Gன் பின்புற பேனலில், தங்க வளைய எல்லையில் ஒரு பெரிய வட்ட கேமரா யூனிட் உள்ளது. இதில் டூயல் கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் கைபேசியின் வலது விளிம்பில் காணப்படுகின்றன. மேலும் இதன் விலை இந்திய சந்தையில் நிச்சயம் 15,000க்கும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Vivo T3x 5G இன் பேட்டரி விவரங்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. மேற்கூறிய தொலைபேசி 6,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்க அதிக வாய்ப்புள்ள இருப்பதாக குறைப்படுகிறது. ஆடியோ பூஸ்டர் ஆதரவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை இந்த போன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Switch on your turbo energy with the upcoming 5G. Making its way to you soon.
Know more https://t.co/SrcvfjQaY6 pic.twitter.com/aYNU1cazpT
ஏற்கனவே வெளியான Vivo T2x 5G இந்தியாவில் 4GB + 128GB மாடல் 12,999 விற்பனையானது. மேலும் 6GB + 128GB மற்றும் 8GB + 128GB வகைககள் முறையே ரூ. 13,999 மற்றும் ரூ. 15,999க்கு விற்பனையானது. அரோரா கோல்ட், க்ளிம்மர் பிளாக் மற்றும் மரைன் ப்ளூ நிழல்களில் வழங்கப்படும் இந்த போன் ஸ்னாப்டிராகன் 695 SoC, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500mAh பேட்டரி, 64 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் வருகிறது.