இரண்டு கம்பெனியில் ரகசியமாக வேலை பார்த்து ரூ.1.4 கோடி சம்பாதித்த கில்லாடி ஐ.டி. ஊழியர்!

By SG Balan  |  First Published Apr 8, 2024, 4:46 PM IST

ஒரே நேரத்தில் பல தொலைதூர வேலைகளை மறைமுகமாக நிர்வகிப்பது எப்படி என்று கூறும் யூடியூப் வீடியோவை அவர் பார்த்துள்ளார்.


ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கடனை அடைப்பதற்காக ரகசியமாக இன்னொரு வேலையையும் பார்த்து மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கிறார். இதன் மூலம் அவரது கடன் பாதியாகக் குறைந்துள்ளது.

தொழில்நுட்ப வல்லுநரான ஆடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆண்டுக்கு சுமார் 85,000 டாலர் (ரூ. 70 லட்சம்) சம்பாதித்து வந்தார், மேலும் 118,000 டாலர் (ரூ. 98 லட்சம்) கல்விக்கடன் பாக்கியும் வைத்திருந்தார். ஆனால், அந்த ஆண்டின் இறுதியில், அவர் தனது ஆண்டு வருமானத்தை இரட்டிப்பாக்கி 170,000 டாலர் (தோராயமாக ரூ. 1 கோடி) சம்பாதிக்க ஆரம்பத்துவிட்டார். இதனால் ஒரு வருடத்திற்குள் அவரது கடன் தொகையும் (ரூ 42 லட்சம்) கணிசமாகக் குறைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

அரிசோனாவில் பாதுகாப்பு அபாய நிபுணராக பணிபுரியும் ஆடம், உணவு விநியோக சேவைகள் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டி வந்தார். ஆனால், அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இன்னும் அதிக பணம் சம்பாதிப்பதற்காக அவர் தனது முழுநேரப் பணியைத் தவிர மற்றொரு தொலைநிலைப் பணியையும் மேற்கொண்டார்.

ஒரே நேரத்தில் பல தொலைதூர வேலைகளை மறைமுகமாக நிர்வகிப்பது எப்படி என்று கூறும் யூடியூப் வீடியோவை அவர் பார்த்துள்ளார்.

வாட்ஸ்அப் கால் மூலம் வரும் ஆபத்து! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை! நம்பரை பார்த்து சுதாரிச்சுக்கோங்க...

அந்த ஐடியாவை பின்பற்றி இரண்டு வேலைகளைச் செய்து வருமானத்தை இரட்டிப்பாக்கி, இரண்டு ஆண்டுகளுக்குள் கடனை அடைக்க முடிவு செய்தார். அதன்படி, பிப்ரவரியில் தனது இரண்டாவது வேலையில் சேர்ந்திருக்கிறார்.

இதுபற்றி பேட்டி ஓர் ஊடக நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ள ஆடம், "எனது சுயவிவரத்தின் அடிப்படையில் ஒருவர் என்னை LinkedIn இல் தொடர்பு கொண்டார். இரண்டு வாரங்களுக்குள், நான் விண்ணப்பித்தேன். இரண்டு நேர்காணல்களுக்குப் பிறகு வேலை வழங்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு வேலைகளைச் செய்வதால் கடனைத் திருப்பிச் செலுத்துவதோடு, சில நண்பர்களுக்கு நிதி உதவி வழங்கவும் முடிந்தது என ஆடம் சொல்கிறார். இரண்டாவது வேலையில் வாரத்திற்கு 30 முதல் 60 மணிநேரம் வரை வேலை செய்வதால், இந்த ஏற்பாடு நிரந்தரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனந்த் அம்பானி துபாயில் ஷாப்பிங்! ரோல்ஸ் ராய்ஸ் காருடன் வரிசை கட்டி வந்த 20 கார்கள்!

click me!