ஏர்டெல் நிறுவனமும் சமீபத்தில் மூன்று மாத வேலிடிட்டி கொண்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருந்தது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மூன்று மாதங்கள் வேலிடிட்டி கொண்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் டேட்டா ஆட் ஆன் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. வி நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ. 151 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 8GB வரையிலான டேட்டா வழங்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
வி நிறுவனம் சமீபத்தில் தான் ரூ. 82 விலையில் பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையை அறிவித்து இருந்தது. அந்த சலுகையில் சோனி லிவ் மொபைல் சந்தா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டெலிகாம் சந்தையில் வி நிறுவனத்துக்கு போட்டியாளராக விளங்கும் ஏர்டெல் நிறுவனமும் சமீபத்தில் மூன்று மாத வேலிடிட்டி கொண்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருந்தது.
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய டேட்டா டேட் ஆன் பிரீபெயிட் சலுகை விலை ரூ. 399 மற்றும் ரூ. 899 ஆகும். இவை முறையே 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தன.
வி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ரூ. 151 பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையில் மொத்தம் 8GB டேட்டா, மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். டேட்டா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா தவிர இந்த சலுகையில் வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.