உங்க மொபைல்ல உள்ள Flashlight அ எப்பவாச்சு இப்படி யூஸ் பண்ணீருக்கீங்களா?

By Dinesh TGFirst Published Oct 31, 2022, 2:59 PM IST
Highlights

அனைத்து மொபைலிலுமே ஃபிளாஷ் லைட் ( Flashlight ) என்ற ஒரு அம்சம் இருக்கும். இதனை அனைவரும் வெளிச்சத்திற்காக மட்டுமே பயன்படுத்துவர். ஆனால் ஒரு முறை இதை இவ்வாறு பயன்படுத்திப் பாருங்கள். 
 

பொதுவாக ஒரு இருட்டான இடத்தில் பிளாஷ் லைட், டார்ச் லைட் செயலிகளைப் பயன்படுத்துவோம். ஆனால் இந்த லைட் செயலியில் ஏராளமான அம்சங்கள் உள்ளன. அவற்றை இங்கே காண்போம்.

1. உங்கள் மொபைலில் உள்ள ஃபிளாஷ் லைட்டின் வெளிச்ச அளவை மாற்றலாம்:

நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும்போது அதிலுள்ள பிரைட்னஸை கூட்டி குறைப்பது போல உங்கள் ஃப்லேஸ்லைடின் பிரைட்னஸையும் கஸ்டமைஸ் செய்யலாம்.

இதற்கு உங்கள் மொபைலில் உள்ள ஃப்லேஸ்லைடினை லாங் பிரஸ் செய்து கொள்ளுங்கள். அதில் லெவல் 1 - 5 என ஐந்து லெவெல்கள் இருக்கும். உங்கள் டார்ச்சை ஆன் செய்து இந்த ஐந்து லெவல்களில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

டச் ஸ்கிரீனுடன், மிகமிக மெல்லிதான லேப்டாப்.. Xiaomi Book Air 13 அறிமுகம்!

2. மெசேஜ் மட்டும் கால்ஸ் வரும்போது லைட் எரிய வைக்கலாம் :

இதற்கு உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும். அதில் அக்சஸிபிலிட்டி ( Accessibility ) என்பதை க்ளிக் செய்யுங்கள். பின் அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் ( Advanced Settings ) என்பதை தேர்வு செய்யுங்கள்.

அதில் ஃபிளாஷ் லைட் நோட்டிஃபிகேஷன் என்பதை க்ளிக் செய்யுங்கள். அதில் கேமரா ஃபிளாஷ் நோட்டிஃபிகேஷன் ( Camera Flash Notification ) என்பதை ஆன் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு கால் அல்லது மெசேஜ் வரும் சமயத்தில்  உங்கள் கேமராவில் உள்ள லைட் எரியும்.
இதனால் உங்கள் மொபைல் சைலண்டில் இருந்தால் கூட அதில் வரக்கூடிய வெளிச்சத்தை வைத்து உங்களுக்கு கால் அல்லது மெசேஜ் வருகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்துக் கொள்ளலாம். 

click me!