
முன்பெல்லாம் டுவிட்டரில் ஏதாவது டிரெண்டிங் ஆகி வரும். ஆனால், எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய பிறகு, டுவிட்டர் நிறுவனமே டிரெண்டிங் ஆகி வருகிறது. அந்த அளவிற்கு எலான் மஸ்க்கின் திட்டங்களும், செயல்பாடுகளும் உள்ளன. எலான் மஸ்க்கின் டுவிட்டர் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று 16 ஆம் தேதி டுவிட்டரில் ஒரு கேள்வி எழுப்பி டுவீட் செய்தார். அதில் அவர், ‘இன்ஸ்டாகிராம் மக்களை மனச்சோர்வடையச் செய்கிறது மற்றும் ட்விட்டர் மக்களை கோபப்படுத்துகிறது. எது சிறந்தது?’ என்றவாறு கேள்வி எழுப்பினார். எலான் மஸ்க்கின் இந்தக் கேள்விக்கு சுமார் 1.3 லட்சம் பேர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் பல சுவாரசியமான பதில்களும் வந்துள்ளன.
வால் ஸ்ட்ரீட் சில்வர் என்பவர், ட்விட்டர் என்னை கோபப்படுத்தவில்லை. அது என்னை நாள் முழுவதும் சிரிக்க வைக்கிறது. உதவிக்குறிப்பு: அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் ஊடக "செய்தியாளர்களை" பின்தொடர வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் கைலே என்பவர், ‘Instagram பயனற்றது. சரியான நேரத்தில் தகவல்களைப் பெற ட்விட்டர் சிறந்த இடம்.’ என்று எலான் மஸ்கிற்கு ஆதரவாக பதிலளித்துள்ளார்.
அதன்பிறகு இன்று காலை எலான் மஸ்க் மீண்டும் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், ‘நீங்கள் வெறுக்கும் கணக்குகளை டிராஷ் செய்தால், எங்கள் அல்காரிதம் அந்தக் கணக்குகளைப் போல் இருக்கும் பல கணக்குகளை உங்களுக்குக் காண்பிக்கும். *அந்த* கணக்கை டிராஷ் செய்ய நீங்கள் விரும்பினால், *இந்த* கணக்கையும் டிராஷ் செய்ய விரும்புகிறீர்களா என்பது தான் அடிப்படையாக கேட்கப்படுகிறது. உண்மையில் இது தவறில்லை lol’ என்று எலான் பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரின் புதிய அம்சம்:
தற்போது வரவிருக்கும் அம்சம் ‘நீண்ட வடிவ ட்வீட்’ ஆகும் . முதலில், ட்விட்டர் பயனர்கள் 140 எழுத்துக்களில் டைப் செய்ய முடிந்தது அதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த எழுத்து வரம்பை 280 ஆக அதிகரிக்கப்பட்டது. டுவிட்டரில் பயனர்களின் அனுபவத்தை மேலும் செம்மைப்படுத்த ட்விட்டர் அதன் UI தளத்தில் (பயனர் இடைமுகம்) புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த அப்டேட் அப்போது அமலுக்கு வரும் என்று தெரியவில்லை. மேலும், எவ்வளவு எழுத்துக்கள் வரையில் எழுதலாம் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.