தமிழக மக்களுக்கு ஏற்றவாறு டுவிட்டர் தலைப்புகள் முழுக்க முழுக்க தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் உள்ளூர் மொழிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது டுவிட்டரில் முழுக்க முழுக்க தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழை முதன்மை மொழியாக தேர்வு செய்வதின் மூலம் அனைத்து தலைப்புகளும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் 100 சதவீதம் தமிழில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு , ஐ ஓ எஸ் ,ஸ்மார்ட்போன் மற்றும் வெப் பயனாளர்கள் அனைவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தமிழிலேயே தலைப்புகளை வெளியிடும் வசதி அறிமுகமாகியுள்ளது. மேலும் தமிழ் பயனாளர்கள் கவிதை, நூல் , கட்டுரை, பாடல்கள், மற்றும் அனைத்துவிதமான செய்திகளையும் முழுக்க முழுக்க தமிழிலேயே வெளியிடலாம்.
விவாதங்கள், இலக்கியம் போன்ற பல்வேறு விஷயங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு டுவிட்டர் நிறுவனம் இந்த மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. பன்முக கலாச்சாரம் கொண்ட இந்தியாவினுடைய கலை, மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நோக்கில் டுவிட்டர் நிறுவனம் தனது தளத்தை தமிழக மக்களுக்காக இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அட்டகாசமான வசதிகளுடன் வரும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2.. முன்பதிவு இன்று தொடக்கம்.!
டுவிட்டரில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ் மூன்றாம் இடத்திலுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு டுவிட்டர் நிறுவனம் தமிழை முதன்மை மொழிகள் தேர்வு செய்யும் தளத்தில் சேர்த்துள்ளது. இதன்மூலம் தமிழில் செய்திகளைத் தேடும் பயனாளர்கள் தமிழிலே டைப் செய்தால் அவர்களுக்கு தேவையான தகல்வல்களை பெறலாம் என அறிவித்துள்ளது.
WhatsApp-ல் இனி ஸ்கோரல் செய்து மெசேஜ்களைப் பார்க்கத் தேவையில்லை.. வரப் போகிறது புதிய அப்டேட்!
பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமான டுவிட்டரில் தான் அதிகமான விவாதங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகின்றன. பலப்பல சுவாரஸ்யமான விவாதங்கள் மற்றும் செய்திகள் டுவிட்டர் பக்கத்துலயே வெளியிடப்படுகிறது. மேலும் தமிழ் மக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த வசதியானது டுவிட்டர் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.