அமேசானில் கிரேட் இந்தியன் சேல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்குப் போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் தற்போது பிக் பில்லியன் டே என்ற பெயரில் சிறப்பு விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதில் பெரும்பாலானோர் எதிர்பார்த்த ஆஃபர் ஐபோன் என்றே சொல்லலாம்.
Flipkart பிக் பில்லியின் டே சிறப்பு தள்ளுபடி விற்பனையில், ஐபோன்களுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஐபோன் வாங்க வேண்டும், குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு இதுவே சரியான தருணம்.
அமேசானில் கிரேட் இந்தியன் சேல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்குப் போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் தற்போது பிக் பில்லியன் டே என்ற பெயரில் சிறப்பு விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதில் பெரும்பாலானோர் எதிர்பார்த்த ஆஃபர் ஐபோன் என்றே சொல்லலாம்.
undefined
காரணம் ஆப்பிள் நிறுவனம் தரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் ஐபோனின் முந்தைய பதிப்புகளான ஐபோன் 13, ஐபோன் 12 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, தற்போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சிறப்பு விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13,12 ஸ்மார்ப்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விலை விவரகள் முழுமையாக வெளிவரவில்லை.
இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, ஐபோன் 12 ஸ்மார்ட்போனின் விலை 39.990 ரூபாய்க்கும், ஐபோன் 12 மினி ஸ்மார்ட்போனின் விலை 34,990 ரூபாய்க்கும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோனை பொறுத்தவரையில், ஒவ்வொரு ஆண்டும் வெறும் ஓரிரு மாற்றங்கள் மட்டுமே தான் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஐபோன் 13ஐ அப்படியே வைத்து ஐபோன் 14 அறிமுகமாகியுள்ளது. ஐபோன் 12ஐ அப்படியே டிசைன் செய்து ஐபோன் 13 கொண்டு வரப்பட்டதாக நெட்டிசன்கள் புலம்புகின்றனர்.
எது எப்படியோ, ஐபோன் வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்பவருக்கு தற்போது காற்று உங்கள் பக்கம் வீசுகிறது. முந்தைய பதிப்பு என்றாலும் தரமான ஸ்மார்ப்போனாக இருக்கும்.