"இந்த அம்சம் பயனர்கள் எந்தப் பதிவையும் வேறு யாரும் பார்த்துவிடுவார்களோ என்று கவலைப்படாமல் லைக் செய்ய உதவும்" என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஒரு பதிவை லைக் செய்த காரணத்திற்காக ட்ரோல் செய்யப்படுவதைத் தடுக்க இது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க், சமூக ஊடக தளமான ட்விட்டரில் அதன் பயனர்களுக்கு புதிய பிரைவசி ஆப்ஷஐக் கொடுத்துள்ளார். அதன்படி, இனி ட்விட்டர் பதிவுகளில் லைக் செய்தவர்கள் யார் என்பதை மற்றவர்கள் பார்க்க முடியாது.
புதிய அம்சத்தின் மூலம், பயனர் அவர்கள் விரும்பும் பதிவுகளை தனிப்பட்ட முறையில் லைக் செய்யலாம். லைக் செய்திருப்பதை அந்தப் பதிவரும் லைக் செய்தவரும் மட்டுமே பார்க்க முடியும். மற்றவர்கள் அந்தப் பதிவை யார் லைக் செய்துள்ளனர் என்று பார்க்க முடியாது.
இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், "இந்த அம்சம் பயனர்கள் எந்தப் பதிவையும் வேறு யாரும் பார்த்துவிடுவார்களோ என்று கவலைப்படாமல் லைக் செய்ய உதவும்" என்று தெரிவித்துள்ளார். ஒரு பதிவை லைக் செய்த காரணத்திற்காக ட்ரோல் செய்யப்படுவதைத் தடுக்க இது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மே 22ஆம் தேதி ட்விட்டரின் இன்ஜினியரிங் இயக்குனர் ஹாஃபோய் வாங், "லைக் ஆப்ஷனை ப்ரைவேட்டாக மாற்றப் போகிறோம். லைக் செய்வது பொதுவெளியில் தெரியும் தவறான நடத்தைக்கு வழிவகுக்கிறது" என்று கூறினார்.
ட்ரோல் செய்பவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற பயத்தில் அல்லது தங்கள் இமேஜை பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் பலர் பிரியமான பதிவுகளையும் லைக் செய்வதில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
"விரைவில் யார் பார்க்கப் போகிறார்களோ என்று என்று கவலைப்படாமல் லைக் செய்யலாம். அதிக பதிவுகளை லைக் செய்யும்போது உங்களுக்கான அல்காரிதம் சிறப்பாக இருக்கும் என்பதையும் நினைவூட்டுகிறேன்" என்று அவர் தெரிவித்திருந்தார்.