ட்விட்டர் நிறுவனம் அதிரடி... போலி கணக்குகள் முடக்கம்..!

Published : Sep 20, 2019, 05:24 PM ISTUpdated : Sep 20, 2019, 05:27 PM IST
ட்விட்டர் நிறுவனம் அதிரடி... போலி கணக்குகள் முடக்கம்..!

சுருக்கம்

போலி ட்விட்டர் கணக்குகள் மூலம் தவறான செய்திகளை வழங்கி வந்த ஆயிரக்கணக்கான கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது. 

உலக அளவில்  தவறான தகவல்களை பரப்பியட் குற்றசாட்டில் போலி கணக்குகள் மீது ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. உலக அளவில் போலி செய்திகளையும், வதந்திகளையும்  பரப்பி வந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் காஷ்மீர் தொடர்பாக ஆட்சேபகரமான கருத்துகள் ட்விட்டர் மூலம் பரப்பப்படுவதற்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து 333 பாகிஸ்தானியப் பயனர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. 

செய்தி நிறுவனங்கள், விஐபிகள், அரசு அலுவலகங்கள் முதல் சாமானியன் வரை ட்விட்டர் அக்கவுண்டை பயன்படுத்தி தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். சிலர் போலி ட்விட்டர் கணக்குகளை ஆரம்பித்து அவதூறு, வதந்தி, போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். உலகம் முழுவதும் மேலும் சில அக்கவுண்ட்கள் முடக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.  

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

"ஜெமினியா? சாட்ஜிபிடியா?" எது பெஸ்ட்? குழப்பமே வேண்டாம்.. உங்களை ஈஸியாக்கும் சூப்பர் டிப்ஸ்!
உங்கள் மொபைல் போன் பாதுகாப்பானதா? இந்த செட்டிங்ஸ் மாத்திடுங்க.. இல்லேன்னா காலி..