பல்வேறு புது அம்சங்கள்..இதையெல்லாம் செய்யலாம்... மாஸ் காட்டும் வாட்ஸ்அப்..!

By Kevin Kaarki  |  First Published Apr 13, 2022, 9:44 AM IST

வாட்ஸ்அப் செயலியில் டவுன்லோட் டிராயிங் டூல்ஸ், சர்ச் ஷார்ட்கட்ஸ், மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.


மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் பல்வேறு புது அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., விண்டோஸ் மற்றும் வெப் பயனர்களுக்கு புது அப்டேட்கள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் சில அம்சங்கள் ஏற்கனவே வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு விட்டன. 

இவைதவிர வாட்ஸ்அப் செயலியில் டவுன்லோட் டிராயிங் டூல்ஸ், சர்ச் ஷார்ட்கட்ஸ், மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. வாட்ஸ்அப் செயலியில் விரைவில் வழங்கப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

Tap to resize

Latest Videos

undefined

டிராயிங் டூல்ஸ் மற்றும் மீடியா விசிபிலிட்டி அம்சங்கள்:

வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா பதிப்பில் புதிதாக டிராயிங் டூல்களை தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு வாட்ஸ்அப் வழங்கி இருப்பதாக WABetaInfo தகவல் வெளியிட்டு உள்ளது. வாட்ஸ்அப் செயலியில் புதிதாக மூன்று டிராயிங் டூல்கள்: இரண்டு புது பென்சில்கள் மற்றும் பிலர் டூல் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

இவை மட்டும் இன்றி பல்வேறு பென்சில் டிப் வெயிட் மற்றும் பிலர் டூல் உள்ளிட்டவைகளை வழங்குவதற்கான பரிசோதனைகளை வாட்ஸ்அப் மேற்கொண்டு வருகிறது. இதில் பிலர் டூர் ஏற்கனவே ஐ.ஓ.எஸ். தளத்திற்கான வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டிராயிங் எடிட்டருக்கான இண்டர்ஃபேஸ் மட்டுமே புதிதாக வழங்கப்பட்டு உள்ளது. 

புதிய டிராயிங் எடிட்டருக்கான இண்டர்ஃபேஸ் சில பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் அதிக ஆக்டிவேஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதே அம்சம் வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பிலும் வழங்கப்பட இருக்கிறது. பலருக்கும் இந்த அம்சம் வழங்கப்பட்ட பின் இதில் மாற்றம் செய்யப்படும். 

சர்ச் ஷார்ட்கட்:

டிராயிங் எடிட்டருடன் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக சர்ச் ஷார்ட்கட் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஷார்ட்கட் அம்சம் கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் பீட்டா 2.22.6.3 வெர்ஷனில் வழங்கப்பட்டு உள்ளது. புது ஷார்ட்கட் அம்சம் மூலம் பயனர்கள் நேரடியாக பெர்சனல் காண்டாக்ட் மற்றும் க்ரூப் சாட்களில் இருந்து தேடல்களை மேற்கொள்ள முடியும். தற்போது இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த சிலருக்கும் சமயங்களில் சர்ச் ஷார்ட்கட் சரிவர தெரியவில்லை என கூறப்படுகிறது. பீட்டா வெர்ஷில் இதுபோன்ற குளறுபடிகள் சாதாரணமானது தான்.

மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ்:

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் எமோஜி ரியாக்‌ஷன்ஸ் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. புது அம்சம் கொண்டு பயனர்கள் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு ஆறு எமோஜிக்களில் ஒன்றை பதிலாக அனுப்ப முடியும். ஏற்கனவே இதேபோன்ற அம்சம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் என மெட்டா நிறுவனத்தின் மற்ற செயலிகளிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முதற்கட்டமாக லைக், லவ், லாஃப், சர்பிரைஸ்டு, சேட் மற்றும் தேங்ஸ் உள்ளிட்ட எமோஜிக்கள் இடம்பெற்று உள்ளன. 

மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் தனிப்பட்ட சாட் மற்றும் க்ரூப் சாட்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. கூடுதலாக பயனர்கள் மெசேஜ் ரியாக்‌ஷனை எனேபில் / டிசேபில் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றை பயனர்கள் ரியாக்‌ஷன் நோட்டிபிகேஷன்ஸ் ஆப்ஷில் இருந்தபடி செய்து கொள்ள முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.22.8.3 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

கோட் வெரிஃபை:

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் கோட் வெரிஃபை அம்சம் அதன் வெப் வெர்ஷனில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கோட் வெரிஃபை அம்சம் வாட்ஸ்அப் வெப் வெர்ஷன் பாதுகாப்பாக இருக்கிறதா, அதன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதிக்கப்படாமல் இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் மற்றும் கிளவுட்ஃபிளேர் கூட்டணியின் கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

click me!