மீண்டும் மீண்டுமா..? கண்டெயினரில் எரிந்து நாசமான 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!

By Kevin Kaarki  |  First Published Apr 12, 2022, 5:00 PM IST

தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுபற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுடன் மும்பை ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெயினர் ஒன்று நாசிக் அருகே செல்லும் போது தீப்பிடித்து எரிந்தது. இதில் வாகனத்தில் ஏற்றப்பட்ட ஸ்கூட்டர்களில் பாதி யூனிட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. 

20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் காலி:

Tap to resize

Latest Videos

தீ விபத்து சரியாக 4.15 மணி அளவில் பதார்டி பதா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றின் அருகில் அரங்கேறியது. தீ விபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தீ அணைக்கும் பணிகளில் CIDCO மற்றும் அம்பாட் MIDC தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்து வந்தன. கண்டெயினரில் 40 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தீ விபத்தில் சிக்கி 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.

தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுபற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இண்டர்னல் கம்பஷன் என்ஜின் வாகனங்களில் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகம். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளதால், தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் பலத்த சேதம் ஏற்படும். மேலும் எலெக்ட்ரிக் வாகனம் தீப்பிடித்து எரியும் பட்சத்தில் அதனை அணைப்பது மிகவும் கடினமான காரியம் ஆகும்.

அதிக தீ விபத்துக்கள்:

சமீப காலங்களில் இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களால் அதிக தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனினும், இவைகளில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்து வந்தது. தற்போதைய விபத்தில் அதிகபட்சமாக 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. கண்டெயினர் டிரக்கில் எதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

ஐந்தாவது முறை:

எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவது சமீப காலங்களிலேயே இது ஐந்தாவது முறை ஆகும். முன்னதாக ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று பூனேவில் தீப்பிடித்து எரிந்தது. இது மட்டும் இன்றி தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மார்ச் 28 ஆம் தேதி மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தமிழ் நாட்டிலேயே தீப்பிடித்து எரிந்தது. இதைத் தொடர்ந்து மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்னையில் தீப்பிடித்து எரிந்தது. 

click me!