ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஐபோன் SE மாடலின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய தகவல்களின் படி ஆப்பிள் சந்தை மதிப்பு 3 டிரிலியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. உலகில் இத்தகை மதிப்பு கொண்ட நாடுகள் எண்ணிக்கை நான்கு மட்டுமே. இதில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் மதிப்பு இதை விட அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் லோயர் மற்றும் மிட் ரேன்ஜ் பிரிவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 2022 ஐபோன் SE மாடல் விலை 300 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 22,516 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவலை சந்தை வல்லுனரான ஜான் டொனோவன் தெரிவித்தார்.
undefined
தற்போதைய ஐபோன் SE மாடலின் விலை 399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 29,947 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதிய ஐபோன் SE விலை இதைவிட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாடலில் மேம்பட்ட பிராசஸர்கள், 5ஜி வசதி மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனிற்கு மாறுவோரை குறித்து புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்யும் நோக்கில் தான் புதிய ஐபோன் SE 3 உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறைந்த விலை ஐபோன் SE மாடல் மூலம் மிட்-ரேன்ஜ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் மற்றும் 300 மில்லியன் பழைய ஐபோன் பயனர்களை ஈர்க்க ஆப்பிள் திட்டமிடுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 3 மாடலில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், இருபுறங்களிலும் கிளாஸ் பாதுகாப்புடன் அலுமினியம் சேசிஸ், ஹோம் பட்டனில் டச் ஐ.டி. சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த மாடல் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.