Samsung Galaxy A03 : ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கேலக்ஸி A ஸ்மார்ட்போன் அறிமுகம் - மாஸ் காட்டிய சாம்சங்

By Kevin KaarkiFirst Published Feb 25, 2022, 3:46 PM IST
Highlights

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A03 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி A03 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச், ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லைவ் ஃபோக்கஸ், பியூட்டி மோட் மற்றும் ஸ்மார்ட் செல்)பி ஆங்கில், டால்பி அட்மோஸ் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது . இது வயர்டு மற்றும் ப்ளூடூத் ஹெட்செட்களில் சீராக இயங்கும் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி A03 அம்சங்கள்

- 6.5 இன்ச் HD+ 720x1600 பிக்சல், இன்ஃபினிட்டி V TFT டிஸ்ப்ளஏ
- ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்
- 3GB / 4GB ரேம்
- 32GB / 64GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48MP பிரைமரி கேமரா
- 2MP டெப்த் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5MP செல்ஃபி கேமரா
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 5000mAh பேட்டரி

இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி A03 ஸ்மார்ட்போனின் 3GB ரேம், 32 GB மாடல் விலை ரூ. 10,499 என்றும் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அடுத்த வாரம் சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் துவங்குகிறது. 

click me!