TECNO Spark 10 5G: கூலிங் தொழில்நுட்பத்துடன் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By Asianet TamilFirst Published Mar 30, 2023, 10:45 AM IST
Highlights

டெக்னோ நிறுவனம் குறைந்த விலையில் TECNO Spark 10 5G என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மேலும், குறைந்த விலை போன் என்றாலும், இதில் கூலிங் தொழில்நுட்பம் இருப்பதாக கூறப்படுகிறது.

டெக்னோ நிறுவனம் முதன்முறையாக ஸ்பார்க் வரிசையில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு டெக்னோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனைப் போலவே இந்த போனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

SPARK 10 5G ஸ்மார்ட்ஃபோனில் 120Hz டச் சாம்பிளிங் ரேட், 6.6″ HD+ டாட் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளன. டிமன்சிட்டி 6020 7nm 5G பிராசசர், ஆண்ட்ராய்டு 13, HiOS12.6 ஆகியவற்றுடன் வருகிறது. 5ஜி எனும் போது, 10 வகையான 5ஜி பேண்டுகள் இதில் இருப்பது சிறப்பு. 

ஃபோனில் 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி, ASD மோட், 3D LUT தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட 50MP AI கேமரா, 18W ஃபிளாஷ் சார்ஜ், 5000mAh பேட்டரி ஆகியவை உள்ளன. போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குறிப்பாக சூப்பர்ஃபைன் ஹீட் டிசிபேஷன் சிஸ்டம் உள்ளது. பட்ஜெட் விலையில் இதுபோன்ற கூலிங் சிஸ்டம் இருப்பது பாராட்டக்குரியது. ஹை-ரெஸ் ஆடியோ, DTS சவுண்ட் ஆடியோ உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

TECNO Spark 10 5G - சுருக்கமான அம்சங்கள்

  • திரை: 6.6″ HD டாட் 90Hz டிஸ்ப்ளே, 120Hz டச் சாம்பிளிங் ரேட், 480நிட்ஸ் பிரகாசம்
  • பிராசசர்; டிமன்மிட்டி 6020 7nm 2.2GHz ஆக்டா-கோர் CPU, 950MHz ARM Mali-G57 GPU
  • தொழில்நுட்பம்: 10 வகையான  5G பட்டைகள், கேம் டர்போ டூயல் எஞ்சின்
  • ரேம் மெமரி: 8ஜிபி ரேம்- 4ஜிபி ரேம்+4ஜிபி மெம் ஃப்யூஷன் ரேம்; 64 ஜிபி மெமரி; 1TB வரையிலான SD கார்டு வசதி
  • பேட்டரி: 5000mAh சக்தி கொண்ட பேட்டரி, 18W ஃப்ளாஷ் சார்ஜர், 50 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகும், 39 நாட்கள் வரை நீடித்து உழைக்கும்
  • கேமரா: 50MP+AI லென்ஸ் கேமரா, டூயல் லைட், முன்பக்கத்தில் 8MP AI செல்ஃபி கேமரா

moto g32 ஸ்மார்ட்போனில் புதிய மாடல் அறிமுகம், விலையும் குறைவு!

விலை மற்றும் விற்பனை தேதி: 

TECNO SPARK 10 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று வண்ணங்களில் வருகிறது. அவை: மெட்டா பிளாக், மெட்டா ஒயிட் மற்றும் மெட்டா ப்ளூ ஆகும். வரும் ஏப்ரல் 7, 2023 முதல் விற்பனைக்கு வருகிறது.
 

click me!